India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதால், விழுப்புரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் இடம் இன்று(10-10-2024) முதல் தற்காலிகமாக பழைய டிக்கெட் விற்பனை மையம் கீழே பார்சல் புக்கிங் ஆபீஸ் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விழுப்புரம் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் இதனை தெரிந்து கொள்ளுமாறு தென்னக இரயில்வே அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாக கடையில் சுழற்சி முறையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. எனவே, விருப்பமுள்ள குழுக்கள் வட்டார திட்ட செயலாக்க அலகின் மேலாளர் அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினருக்கு எல்.பி.ஜி., சலவை பெட்டிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சேர்ந்த சலவை தொழிலில் உள்ளோருக்கு பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு வழங்கப்படுகிறது.
மறைந்த தொழிலதிபர் ‘ரட்டன் டாட்டாவுக்கு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “உலகப் புகழ் பெற்ற இந்தியத் தொழிலதிபர் ரட்டன் டாட்டா காலமான செய்தி அறிந்து வருந்தினேன். ஈட்டிய செல்வத்தைப் பூட்டி வைக்காமல் கல்வி, சுகாதாரம் என மக்களுக்காக வாரி வழங்கியவர். அவருக்கு என் அஞ்சலி” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
விக்கிரவாண்டி அடுத்த விசாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கான பாதுகாப்பு குறித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தும் பங்கேற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உத்தேசமாக உள்ள காலியாகவுள்ள 49 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.drbvpm.in இணையதளம் வழியாக மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அடுத்த பட்டணம் இந்திரா நகரை சேர்ந்த தம்பதிகளான முத்து, எல்லம்மாள்(50) இடத்திற்கு அருகில் தன்ராஜ் என்பவரின் இடம் உள்ளது. தன்ராஜின் இடத்தை எல்லம்மாள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அமமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான முத்து தலைமையிலான கும்பல் எல்லம்மாளை திட்டியும், தாக்குதல் நடத்தி வீட்டை இடிக்க முயன்றதாக ரோசணை போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துவை கைது செய்தனர்.
கிளியனூர், கொஞ்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரகுமார். இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், நேற்று அதிகாலை கழுத்தில் காயங்களுடன் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த விழுப்புரம் எஸ்.பி.தீபக் சிவாஜ் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜை, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து பேசியுள்ளார். மாநாட்டிற்கு மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சந்தித்து பேசியதாக தகவல் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.