Villupuram

News October 11, 2024

விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடனுதவி

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள எஸ்சி, எஸ்டினருக்கு சந்தை மதிப்பில் 50% அல்லது ரூ.5 லட்சம் மானியமும், 100% பதிவு கட்டண விலக்கு, பங்கு தொகை தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியிலிருந்து 6% வட்டியில் வங்கி கடனுக்கு www.tahdco.com விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

திருப்பச்சாவடி அருகே கல்லூரி மாணவன் பலி

image

விழுப்புரம் மாவட்டம் திருப்பச்சாவடி மேடுபகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். மரகதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லோகு மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் தரணி ஆகிய இருவரும் இன்று பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட விபத்தில் லோகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 11, 2024

பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்தது

image

இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நாளை விஜயதசமி கொண்டாட உள்ள நிலையில், அதற்கான பூஜை பொருள்களான அவல், பொறி, பழங்கள், பூ, அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. விழுப்புரம் மார்க்கெட் வீதியான காந்தி வீதி, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை பகுதிகளில், காலை முதல் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது. பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

News October 11, 2024

ரீல்ஸ் பார்த்தபடி பேருந்து இயக்கிய ஓட்டுநர் பணிநீக்கம்

image

திருப்பதியில் இருந்து மாதவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்தப் பேருந்த இயக்கிய விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் பார்த்திபனை, நிரந்தர பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News October 11, 2024

ரேஷன் கடை பணிக்கு போட்டிதேர்வு அவசியம்: ராமதாஸ்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நியாய விலைக்கடைகளில் 2,000 பேர் நேரடியாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நியாயவிலைக் கடை பணியாளர்கள் பணிக்கு நேரடி நியமனம் கூடாது. போட்டித் தேர்வுகள் மூலம் நியமிக்க வேண்டும். அப்போது, சாமானிய மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்” எனக் கூறினார்.

News October 11, 2024

5 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்: ஆட்சியர்

image

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில், நேற்று மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், “மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் 3,000 பனை விதைகள் நடப்படவுள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News October 11, 2024

விழுப்புரத்தில் மயங்கி உயிரிழந்த மூதாட்டி

image

சென்னையைச் சேர்ந்த காணிக்கைமேரி (70) என்பவர், நேற்று விழுப்புரத்திற்கு அரசு பேருந்தில் பயணித்தார். விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே பேருந்து நின்றபோது, காணிக்கைமேரி கீழே இறங்கியுள்ளர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 11, 2024

மோடி ஆட்சியில் மீனவர்கள் கொல்லப்படவில்லை: எச்.ராஜா

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடியதாக உண்மை தெரியாமல் ராமதாஸ் பேசியிருப்பதால் அவரை விரைவில் சந்திக்க உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக – காங்கிரஸ் கூட்டணியில் 680 மீனவர்களை கொல்லப்பட்டதாகவும், ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படவில்லை. கொலைகாரங்க சார் இந்த சர்க்கார் எனத் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் தெருவில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, கோலியனூரான் வாய்க்காலில் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் நகராட்சி ஆணையர் திரு.வீரமுத்துக்குமார், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி உட்பட பலர் உள்ளனர்.

News October 10, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!