India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, இன்று (நவ.1) விழுப்புரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பலகாரங்கள் செய்து, அறுசுவை உணவு சமைத்து, வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் கொண்டாடினர். இதனால், இரவில் விழுப்புரம் ஜொலித்தபடி காணப்பட்டது. நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாடினீர்கள்?
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (31.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்டம் கப்பை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உதயகுமார், கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக மாநாட்டிற்கு நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பாதிராப்புலியூர் அருகே ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சிகிச்சை பலனின்றி உதயகுமார் நேற்று உயிரிழந்தார். மாநாட்டிற்கு வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
விதை சான்றழிப்பு துறையின் விழுப்புரம் துணை இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள் தர்பூசணி மற்றும் கிர்ணிப்பழ விதைகளை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அரசு அங்கீகாரம் பெறாத அல்லது பதிவுச்சான்றிதழ் இல்லாத விதைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழுப்புரம் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் நடத்தும் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் வாலிபால் சேம்பியன்ஷிப் போட்டி வேலூரில் வருகின்ற நவம்பர் 2 முதல் நவம்பர் 5 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் விழுப்புரம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் கௌதம சிகாமணி சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (30.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் தொகுதி மேற்பார்வையாளர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமசிகாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு, வருகிற நவம்பர் 5, 6 அகிய தேதிகளில் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டப்பட உள்ள நிலையில், இன்று கடைதெருவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த மழையானது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் இடையூறாக இருக்கும்.
Sorry, no posts matched your criteria.