India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வெள்ள நீர் வெளியேற்றும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் க. பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா. லட்சுமணன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது வரை பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அக்.15, 16 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட விழுப்புரம் மாவட்டங்களுக்கு அக்.16ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள், மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் வனப்பகுதியில் உள்ள பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் காட்சி தருகிறார். அவரது கரங்களில் வில், அம்பு இடம்பெற்றுள்ளன. பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று உள்ளது. வேடியப்பனின் வாகனமான குதிரையும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர்,எல்லீஸ்சத்திரம் தடுப்பணை கரையோரம், நாளை காலை 10 மணி அளவில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி கலந்து கொள்ள உள்ளனர். காலை 10.30 மணிக்கு செம்மாரில் மேல்நிலை குடிநீர் தொட்டி, நிழற்குடை, புதிய தார்ச்சாலை திறக்கிறார். தொடர்ந்து 11 மணிக்கு பேரங்கியூரில் புதிய நிழற்குடை திறக்கிறார் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் வரும் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள், தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளை நூலகமாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூல்கள் விவரங்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பசுமையான தமிழ்நாட்டினை உருவாக்கும் பொருட்டும், நீர் வளத்தை காக்கும் பொருட்டும், விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு பசுமை இயக்க திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 இலட்சம் பனை மரவிதைகள் நடும் நிகழ்ச்சியானது நாளை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விழுப்புரம் 20 மிமீட்டர், கோலியனூர் 26 மி மீட்டர், வளவனூர் 22 மி மீட்டர், கெடார் 23 மி மீட்டர், முண்டியம்பாக்கம் 8மி மீட்டர், நேமூர் 25 மி மீட்டர், சூரப்பட்டு 19 மி மீட்டர், வானூர் 3 மி மீட்டர், திண்டிவனம் 6 மி மீட்டர், மரக்காணம் 12 மி மீட்டர், செஞ்சி 22 மி மீட்டர், அவலூர்பேட்டை 10 மி மீட்டர் என மாவட்டத்தில் சராசரியாக 12 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.