Villupuram

News March 26, 2024

அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு

image

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆஜராகவில்லை மேலும் அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (மார்ச் 26) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

News March 25, 2024

விக்கிரவாண்டி பைக் விபத்தில் பெண் பலி

image

திண்டிவனம் தீர்த்தகுளத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி கௌசல்யா, மாமியார் பாக்கியலட்சுமியுடன் நேற்று (மார்ச் 24) பைக்கில் விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தார். வழியில் எதிர்பாராமல் வேன் மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2024

விழுப்புரம்: மூச்சுத் திணறி சிறுவன் பலி

image

சென்னை, பெரியார் நகரை சேர்ந்தவர் பாரதி கண்ணன். இவர், நேற்று தனது மகன் ராபின்(6)-னுடன், விழுப்புரம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குளத்தில் ராபின் குளித்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News March 25, 2024

திருநங்கைகள் கைகளில்… விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கையர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 25) நடைபெற்றது.இதில்
திருநங்கையர்களின் கரங்களில் 100% வாக்களிப்போம்,100% Vote , Myvote my pride,My vote my right, 19.04.2024 போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மெஹந்தி மூலம் எழுதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

News March 25, 2024

தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, விழுப்புரம் (தனி) எம்பி தொகுதியில் விசிகவின் ரவிக்குமார், அதிமுகவின் பாக்யராஜ், பாமகவின் முரளி சங்கர் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.

News March 25, 2024

மகா சண்டியாகத்தில் பங்கேற்ற அமைச்சர்

image

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள அன்னை ஓம் பவதாரணி, ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில், மகா சண்டி யாகம் முதல் நாள் விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

News March 25, 2024

விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

விழுப்புரத்தில், தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 25) அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு, வேட்பாளர் பாக்யராஜை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உரையாற்றினார்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேமிப்பு கிடங்கில் இருந்து நேற்று (மார்ச் 24) வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு, ஆயிரம் ஏந்திய காவலருடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பழனி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

News March 25, 2024

விழுப்புரம்: கானா பாடகர் மீது தாக்குதல்

image

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கானா பாடகர் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். ஜக்காம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அன்பு தனது சொந்த வேலை காரணமாக மேல்மருவத்தூர் சென்று திரும்புகையில் சலவாதி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை ரோசனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.