Villupuram

News March 27, 2024

விழுப்புரம்: கூரை வீடு எரிந்து நாசம்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 7வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரும் மனைவி உமாவும் நேற்று (மார்ச் 26) வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென இவர்களது கூரைவீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2024

புனித வெள்ளி: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை (மார்ச் 27) கூடுதலாக 240 பஸ்களும், மார்ச் 28இல் 80 பஸ்களும், மார்ச் 29இல் 240 பஸ்களும் என மொத்தம் 660 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

News March 27, 2024

விழுப்புரம் வேலைவாய்ப்பு முகாமில் 72 பேருக்கு பணி

image

விழுப்புரம் இஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (மார்ச் 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். 8 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் 72 மாணவ மாணவிகள் பணி நியமன ஆணையை பெற்றனர். இதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News March 27, 2024

அமைச்சர் பொன்முடி நடத்தை விதிகளை மீறியதாக புகார்

image

விழுப்புரம் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று (மார்ச் 26) தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பழனியிடம் அளித்த மனுவில், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால், விசிக வேட்பாளருடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்த அமைச்சர் பொன்முடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் காரில் வந்தார்‌. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 27, 2024

விழுப்புரம்: 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியோர் இவ்வளவா?

image

தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 126 தோ்வு மையங்களில் 12,617 மாணவா்கள், 11,911 மாணவிகள் என மொத்தமாக 24,528 போ் தோ்வு எழுதினா். முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மொத்தம் 2021 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

News March 26, 2024

ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பு மனு தாக்கல்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், இன்று (மார்ச் 26) மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News March 26, 2024

திண்டிவனம்: இரு தரப்பு மோதல் – 2 பேர் கைது

image

திண்டிவனம் அடுத்த சலவாதியை சேர்ந்த ஐயப்பன், சத்தியமூர்த்தி இருவரும் நேற்று (மார்ச்.25) மொளசூர் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கண்ணன், வசந்தகுமார் ஆகியோரது பைக் இவர்களது பைக் மீது மோதுவது போல் சென்றுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் ஐயப்பன் சத்தியமூர்த்தி இருவரையும் கைது செய்தனர்.

News March 26, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (மார்ச் 26) ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி, எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பாதுகாப்பு அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

News March 26, 2024

மாற்றுத்திறனாளிகள் பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (மாா்ச் 26, 27) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன் காரணமாக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.