Villupuram

News March 30, 2024

விசிகவிற்கு பானை சின்னம் உறுதியானது

image

திமுக கூட்டணியில், சிதம்பரம், விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் திருமாவளவனும் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். சின்னம் உறுதியாவதற்கு முன்பே பானை சின்னம் வைத்து திருமாவளவன் வாக்கு சேகரிப்பது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2024

விழுப்புரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் ஊராட்சியில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜ்-க்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். உடன் அதிமுக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், தேமுதிக ஒன்றிய செயலாளர், அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இருந்தனர்.

News March 30, 2024

விழுப்புரம் அருகே மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

image

வானூர் அடுத்த எடைச்சேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (49). இவர் நேற்று (மார்ச் 29) இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

விழுப்புரம்: கருப்பு கொடி கட்டி போராட்டம்

image

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிக்காக, ஜானகிபுரம்-கண்டமானடி குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கேட் (மார்ச் 22) மூடப்பட்டது. இதனால் விழுப்புரத்திற்கு செல்லும் மக்கள் 5 கிமீ தொலைவிற்கு சுற்றிச் செல்கின்றனர். எனவே ரயில்வே கேட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று (மார்ச் 29) வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

News March 29, 2024

விழுப்புரம்: அதிமுகவினர் மீது வழக்கு பதிவு

image

அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், மண்டபம் முன்பு 8 கொடி கம்பங்கள், 2 பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து, விழுப்புரம் தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் அளித்த புகாரில், விழுப்புரம் அ.தி.மு.க., நகர செயலர் ராமதாஸ் உள்ளிட்ட 200 அ.தி.மு.க., வினர் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.

News March 29, 2024

வானூர் அருகே விபத்தில் வேன் ஓட்டுநர் பலி

image

வானூர், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ஹரிதாஸ்(22). இவர் நேற்று முன்தினம் மொரட்டாண்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரி என்ற பெண் மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஹரிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து ஆரோவில் போலீசார் நேற்று(மார்ச் 28) வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 29, 2024

விழுப்புரத்தில் 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 28) நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 13 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News March 29, 2024

மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க 8925533710 மற்றும் 8925533810 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், எனக் கூறப்பட்டுள்ளது.

News March 28, 2024

விழுப்புரத்திற்கு தொல் திருமாவளவன் வருகை

image

விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதி, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று (மார்ச் 28) விழுப்புரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்றார். அப்போது பொன்முடியின் வாகனத்தில் பானை சின்னம் இருப்பதை பார்த்த திருமா, புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News March 28, 2024

விழுப்புரத்தில் நாதக, பாமக வேட்பு மனுக்கள் ஏற்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை வேட்பாளருக்கான மனுக்கள் சரிபார்த்தல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமை தாங்கினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.