Villupuram

News April 9, 2024

மனைவியுடன் தகராறு –  இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை

image

இலங்கையை சேர்ந்தவர் யுகேந்திரன்(29), கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். அதே முகாமை சேர்ந்த சுவாதியை திருமணம் செய்த யுகேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சுவாதி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு சுவாதியுடன் ஏற்பட்ட தகராறில் யுகேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 9, 2024

என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மூலம் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் செயற்கையான மலர்கள் செடிகள் மூலம் “என் வாக்கு என் உரிமை” 100% வாக்களிப்பு வாசகங்களால் அலங்கரிக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகை முன்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 9, 2024

விழுப்புரத்தில் எல்இடி விளம்பரம்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல் 8) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி திண்டிவனம் சார் ஆட்சியர் தியான்ஷீ நிகாம் ஏற்பாட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 100% வாக்களிக்க வேண்டி எல்இடி விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News April 8, 2024

இரண்டாவது சுதந்திரப் போராட்டம் – விசிக வேட்பாளர் ரவிக்குமார்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று நாட்டை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள், என்றார்.

News April 8, 2024

பா.ம.க வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கப்பியாம்புலியூர், வா.பகண்டை, அய்யூர் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பா. ம. க வேட்பாளர் முரளி சங்கருக்கு ஆதரவாக பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். இதில் பா.ம.க நிர்வாகிகள் வேட்பாளருக்கு மாலை , சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 8, 2024

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு

image

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம், அதற்கான அறிவிப்பும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 8, 2024

விழுப்புரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு

image

விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுபோக மாலை 4 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 9 மணிக்குதான் வருகிறது. அடிக்கடி இதுபோல நடப்பதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

News April 7, 2024

முழு அரசு மரியாதையுடன் தகனம்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி நேற்று காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் இறுதிச் சடங்கு முடியும் வரை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் R.இலட்சுமணன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 7, 2024

விழுப்புரம் வி.சி.க வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகர் ஏஜி சபையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு வழக்கறிஞர் M.D. பாபு தலைமையில் பானை சின்னத்திற்கு இன்று ( ஏப்ரல் 7) வாக்கு சேகரித்தனர். உடன் திண்டிவனம் நகர செயலாளர் மு.செ.எழிலரசன் ,திமுக நிர்வாகிகள் மற்றும் வி.சி.க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.