India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 492 மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
புதுச்சேரி, பங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காவலர் கருணாகரன். இவர், நேற்று முன்தினம் தனது மகன் வெற்றிவேலுடன் (3) விழுப்புரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கண்டமங்கலம் அருகே எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில், குழந்தை வெற்றிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுதொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ளர் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஊரணிதாங்கள் அருகே, நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த சலீம்பேகம், முகமது அலி, முகமது பாஷா, நஸ்ரீன்பேகம், ஆயிஷா பிபி, நசீமா பீ ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தொரபாக, செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இளம் வயதிலேயே ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (அக்.23) மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில், முன்னாள் படை வீரர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த ஆசிய பென்காக் சிலாட் போட்டியில், விக்கிரவாண்டியைச் சேர்ந்த மோகனவேல் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்று நேற்று தமிழகம் திரும்பிய அவரை உற்சாக வரவேற்றனர். அப்போது, “ஆசிய சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக அரசு நிதி உதவி அளித்ததால், பண பிரச்னை இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடிந்தது. தனக்கு உதவியவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
விழுப்புரம் மஹாலஷ்மி பிளாசா நிறுவனர் கே.ஜே.ரமேஷின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ரத்த தான முகாம் நடந்தது. இந்நிகழ்வில் விழுப்புரம் மஹாலஷ்மி பிளாசாவில் நடந்த முகாமில், 175 நபர்கள் ரத்த தானம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், விதைகள் பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யவுள்ள விதைகள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகிய நிலையில் மீண்டும் ஒருவர் விலகியது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன வருத்தத்துடன் நாம் தமிழர் கடசியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் விலகுகின்றேன் என மணிகண்டன் கூறியுள்ளார்.
விழுப்புரம் கலக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி தீபக் சிவாஜ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் மேலும் பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் அக்.27 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பகுதியை பல்வேறு நபர்கள் மற்றும் ஊடகத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வந்தனர். இந்நிலையில், மாநாடு திடல் முகப்பு பகுதியில் மக்கள், ஊடகங்கள் யாரும் பார்க்காத வகையில், மறைப்பு ஏற்படுத்தி நிறைவு பணிகள், இரவு பகலாக பணிகள் நடக்கின்றன.
Sorry, no posts matched your criteria.