Villupuram

News April 18, 2024

முதியவரை காப்பாற்றிய தலைமை காவலர்

image

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு ஏதுமின்றி சாலையோரம் முதியவர் ஒருவர் படுத்து கிடந்துள்ளார். மயிலம் காவல் நிலைய தலைமை காவலர் சங்கரன், அவருக்கு தேவையான உணவுகளை வாங்கி கொடுத்து தனது சொந்த செலவில் இன்று சொந்த ஊரான ஆத்தூர் அடுத்த சிறுவாச்சூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 18, 2024

விழுப்புரம் மக்களே இது உங்கள் தொகுதி

image

அனைவரும் மறக்காமல் நாளை வாக்கு செலுத்துவோம். உங்கள் தொகுதியில் யார் யார் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது அறப்போர் செயலியையோ அல்லது கீழ்காணும் அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். விழுப்புரம் – https://www.youtube.com/watch?v=Sa31XB_YxjQ

News April 18, 2024

விழுப்புரம்: வீட்டில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள்

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ் புத்துப்பட்டு காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35), ஓட்டல் ஊழியர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுதால் , இவர் புதுச்சேரி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீசார் நேற்று இரவு அவர் வீட்டுக்குச் சென்று 400 மதுபாட்டில்கள், 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News April 18, 2024

தந்தை, மகன் போதை தடுப்பு காவல் சட்டத்தில் கைது

image

மரக்காணம் அருகே போதைப்பொருள் பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 85 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஈபி சாலையை சேர்ந்த ரவிச்சந்திரன் (58) மற்றும் அவரது மகன் அரவிந்த் குமார் (31) ஆகியோரை கைதுசெய்தனர். ஆட்சியர் உத்தரவின்பேரில் இருவரும் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

News April 17, 2024

விழுப்புரத்தில் அரசு அருங்காட்சியகம்‌

image

மக்களின்‌ நீண்ட கால கோரிக்கையான தொல்லியல்‌ ஆராய்ச்சி மையம்‌ மற்றும்‌ அருங்காட்சியகம்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை அறிவித்த பிறகும்‌ தற்போது வரை அதற்கான எந்த முன்னெடுப்புகளும்‌ எடுக்காமல்‌ உள்ளது. அதை விரைவுபடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்‌ நிதியிலிருந்து விரைவாக கட்டிடம்‌ கட்டிக்‌ தரப்படும்‌ என விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் முரளி சங்கர் என வாக்குறுதி அளித்துள்ளார்.

News April 17, 2024

பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் மக்களவைத் (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பா. ம. க. , வேட்பாளர் முரளிசங்கர், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி. சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கொங்கராம்பூண்டி, வி. சாலை, டி. புதுப்பாளையம், தென்பேர், சின்னத்தச்சூர், எசாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.

News April 17, 2024

கடைசி கட்டமாக வாக்கு சேகரிப்பில் திமுகவினர்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் ஒன்றிய பகுதியில் இன்று (ஏப்ரல் 17) கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட கணபதி பட்டு கிராமத்தில் மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி உட்பட ஏராளமான திமுகவினர் பொதுமக்களிடம் ஆரணி தொகுதி வேட்பாளர் தரணி வேந்தனுக்காக வாக்கு சேகரித்தனர்.

News April 17, 2024

விழுப்புரம் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (40) என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 154 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

News April 16, 2024

புதுச்சேரி சாராயம் பதுக்கியவர் சிறையில் அடைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த பேராவூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (53) என்பவர் அவரது வீட்டில் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற கிளியனூர் போலீசார் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர். முருகனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் சாராயத்தை கலால் துறையில் ஒப்படைத்தனர்.

News April 15, 2024

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டு பாதையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (ஏப்ரல் 15) பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பானை சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். மோடியை வீட்டுக்கு அனுப்புவது நமது தலையாய கடமை என கூறினார்.