Villupuram

News April 25, 2024

விழுப்புரம்: சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற ரவுடி

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ். இவர் நேற்று(ஏப்.24) ரோந்து சென்றபோது கோட்டைமேடு பகுதியில் இருந்து குயிலாப்பாளையம் செல்லும் பாதையில் நின்று கொண்டிருந்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த ரவுடி மணவாளனை விசாரித்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்‌.ஐ. ரமேஷை, மணவாளன் வெட்ட முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

image

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி விழுப்புரம் அண்ணாமலை பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றாமல் அரசு பேருந்து சென்றது குறித்து ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியானது. இதையடுத்து, பெண் பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தும், ஒப்பந்த ஊழியரான நத்துனர் தேவராசு அவர்களை பணி நீக்கம் செய்து விழுப்புரம் மண்டல பொது மேளாலர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 25, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 25, 2024

விழுப்புரம்: கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2005ம் ஆண்டு நிலத்தகராறில், குலசேகரன், காத்தவராயம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 6 பேர் வழக்கு நடந்த காலங்களில் மரணமடைந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News April 24, 2024

விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

image

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 24) துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாச்சாவடிமேடு, தோகை பாடி, கப்பூர், தெளி, ஒருகோடி, நெற்குணம், கோவிந்தாபுரம், கண்டம்பாக்கம், மரகதபுரம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

விழுப்புரம்: 91 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

image

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலா, எள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஏப்ரல் 22) கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 91 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விலைபோனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (ஏப்ரல் 22) குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கிட அதே கோம் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி (ம) ரேவதி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம், நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

News April 22, 2024

விழுப்புரம் அருகே கார் விபத்து: 3 பேர் பலி

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே நேற்று (ஏப்ரல் 21) குறுக்கே பைக் வந்ததால் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது புதுச்சேரி நோக்கிச் சென்ற, ‘எட்டியாஸ்’ கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

News April 21, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி இன்று (ஏப்ரல் 21) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News April 21, 2024

விழுப்புரம் அருகே பீகார் இளைஞர் மரணம்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், நேற்று (ஏப்.20) மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த பீகார் இளைஞர் ராஜேஷ்குமார்(23) என்பவர் பைப் விழுந்து உயிரிழந்தார். கடந்த 4 மாதங்களாக மரக்காணம் பக்கிம்காம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதில் இரவு பகலாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலை புரிந்து வரும் நிலையில், ராஜேஷ்குமார் மீது எதிர்பாராத விதமாக இரும்பு பைப் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.