Villupuram

News April 27, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 27, 2024

அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று (ஏப்ரல் 26) பழங்குடியின செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தின் மற்றும் விசிக முற்போக்கு மாணவர் அணி நிர்வாகி பிரசாந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

News April 27, 2024

மதுக்கடை மூட வேண்டி விண்ணப்பம்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல் 26) டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சார ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. செஞ்சி சாலையில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள 2 அரசு மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார் மற்றும் பார்த்திபன் தலைமையில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகாம் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News April 26, 2024

விழுப்புரம்- திருவாரூர் வரை நீட்டிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 2ம் தேதி முதல் விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரையும்.மே 3ம் தேதி முதல் மயிலாடுதுறை – விழுப்புரம் ரயில் திருவாரூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06877 விழுப்புரம் – திருவாரூர் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 6.25க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10.45க்கு திருவாரூர் சென்றடையும் என செய்தி வெளியாகியுள்ளது.

News April 26, 2024

விழுப்புரம் அழகிய ராஜகிரி கோட்டை!

image

விழுப்புரம், செஞ்சிக் கோட்டையில் உள்ள மூன்று மலைக்கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும். கி.பி. 1200இல் கட்டப்பட்ட இதன் பொருள் மன்னன் மலை ஆகும். இக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம், அரண்மனை தளம், மணிமாடம், களஞ்சியம், இந்தோ-இஸ்லாமிய பாணி கருவூலம், தானியங்கள் பாதுகாப்பு கட்டடம், யானைக்குளம், கோவில்கள், பள்ளிவாசல்கள் போன்றவை சிதைந்த நிலையில் உள்ளன.

News April 26, 2024

விழுப்புரம்: ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசினர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு படையினரிடம் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.

News April 26, 2024

விழுப்புரம் அருகே திமுக மாவட்ட கவுன்சிலர் கைது

image

முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தேர்தல் பணியின்போது பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக காணை போலீசார், ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், ராஜீவ் காந்தி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

News April 26, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 25, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 25, 2024

ரயில் சேவை நீட்டிப்பு

image

விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அதன்படி விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் மே 2 முதல் திருவாரூர் வரை இயக்கப்பட உள்ளன. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.