India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக மாநாட்டில் செல்பி ஸ்டிக், மது, வீடியோ படம், ஃப்ளாஷ் போட்டோகிராப், ரிமோட் கட்டுப்பாடு சாதனம், ஸ்கேட்போர்டு, ஸ்கூட்டர்கள் மிதிவண்டி, பிளகார்டுகள், கண்ணாடி, விலங்குகள், சட்டவிரோத பொருட்கள், ரேடியோ தொடர்பு பொருட்கள், ஆபத்தான பொருட்கள், லேசர் பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், மற்ற அரசியல் கொடிகள் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை நடைபெற உள்ளதையடுத்து, மாநாட்டு திடலில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் வர இருப்பதால் மாநாட்டு திடல் பரபரப்பாக காணப்படுகிறது. மாநாட்டு திடல் வண்ண வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு ரம்யமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநாடுக்கு மக்களை அழைத்து வரும் எந்த வாகனத்தையும் டாஸ்மாக் அருகே நிறுத்த கூடாது என்றும் மது அருந்திவிட்டு வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபட இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு திண்பண்டங்களை தயார் செய்யும் பணி மாநாட்டு திடல் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பயோ பிளாஸ்டிக் பையில் 3 லட்சம் பேருக்கு திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நாளை மாலை நடைபெற உள்ளது. மாநாட்டின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டின் முகப்பு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பல்வேறு திரை பிரபலங்களும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு நடக்கும் இடத்தின் அருகே, அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காக வைத்த பேனர்களை, இரவோடு இரவாக அகற்றி விட்டதாக விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (33). இவர், கடந்த மே மாதம் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று எஸ்.பி. தீபக் சிவாஜி பரிந்துரை பேரில், மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின்படி, ராஜசேகரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், “நடிகர் அஜித்தின் ரசிகர், விஜய்யின் தொண்டர்” என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று சமூக வலைதளங்கள் கவனம் பெற்றுள்ளது. ரசிகர்களாக அடித்துக் கொண்டவர்கள் அரசியலில் ஒன்று சேர்ந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநாடு நடைபெறும் நாளில், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுவதாகவும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் செஞ்சியில் மாற்றி விடப்படுவதாகவும், இதன் மூலம் 15 – 20 கி.மீ வரை பயண நேரம் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.