India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை விக்கிரவண்டியில் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் அனைவரும் அங்கு வைக்கப்பட்டுள்ள கியூ.ஆர். கோடை தொலைபேசி மூலம் ஸ்கேன் செய்து தங்களது வருகையை பதிவு செய்து அதற்கான பதிவு சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதனை அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி வழியாக தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக வெற்றி கழக கொடியுடன் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கிடையாது என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரளான கூட்டம் வரும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரமாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் இடத்திற்குச் சென்ற நடிகர் தாடி பாலாஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ஒரே வியப்பாக இருக்கிறது. விக்கிரமாண்டி சாலையை பார்த்தாலே பிரகாசமாக இருக்கிறது. ஜொலிக்கிறது, 2026இல் மொத்த நாடும் பிரகாசமாக இருக்கும். சினிமாவில் இருந்து நிறைய பேரை மாநாட்டுக்கு அழைத்து இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் வழி தெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக கூகுள் மேப்பில் மாநாடு நடைபெறும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘விஜய் மாநாடு’ என்று போட்டாலே போதும். ட்ரை பண்ணி பாருங்க
தவெக மாநாட்டில் செல்பி ஸ்டிக், மது, வீடியோ படம், ஃப்ளாஷ் போட்டோகிராப், ரிமோட் கட்டுப்பாடு சாதனம், ஸ்கேட்போர்டு, ஸ்கூட்டர்கள் மிதிவண்டி, பிளகார்டுகள், கண்ணாடி, விலங்குகள், சட்டவிரோத பொருட்கள், ரேடியோ தொடர்பு பொருட்கள், ஆபத்தான பொருட்கள், லேசர் பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், மற்ற அரசியல் கொடிகள் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை நடைபெற உள்ளதையடுத்து, மாநாட்டு திடலில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் வர இருப்பதால் மாநாட்டு திடல் பரபரப்பாக காணப்படுகிறது. மாநாட்டு திடல் வண்ண வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு ரம்யமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநாடுக்கு மக்களை அழைத்து வரும் எந்த வாகனத்தையும் டாஸ்மாக் அருகே நிறுத்த கூடாது என்றும் மது அருந்திவிட்டு வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபட இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு திண்பண்டங்களை தயார் செய்யும் பணி மாநாட்டு திடல் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பயோ பிளாஸ்டிக் பையில் 3 லட்சம் பேருக்கு திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நாளை மாலை நடைபெற உள்ளது. மாநாட்டின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டின் முகப்பு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பல்வேறு திரை பிரபலங்களும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.