India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்ததில், சீனிவாசன், கலை என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, சென்னையில் விஜய் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், மதியம் 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. தொடர்ந்து, மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் விஜய் கொடியேற்றி வைத்து, 6 மணிக்கு விழா மேடையில் சிறப்புரையாற்ற உள்ளார். விஜய் என்ன பேசப்போகிறார் என பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விக்கிரவாண்டியில் இன்று மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது என விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் த.வெ.க. மாநில மாநாடு இன்று மாலை நடக்கிறது. மாநாட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 லட்சம் பேர் வருவார்கள் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் மாநாட்டிற்கு வந்து செல்லும் வாகனங்கள் இடையூறு ஏற்படாமல் பயணிக்க இன்று பிற்பகல் 2 மணி முதல் போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள த.வெ.க. மாநாட்டிற்கு வருகை தந்த நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வார் என நம்புகிறோம். மேலும், அவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார். மாநாட்டில் கூட்டம் அதிகமாக உள்ளதால், எங்களது குழந்தைகளை அழைத்து வர இயலவில்லை” என வருத்தம் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், இன்று மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுத் திடலுக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்புகளை மீறி வி.ஐ.பி. இருக்கைகள் மற்றும் பெண்கள் இருக்கைகளில் தொண்டர்களை அமர்ந்திருந்தனர். பவுன்சர்கள் அவர்களை வெளியேற்றியுள்ளனர். இதனால் பவுன்சர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் விழுப்புரம் வழியாக திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். சிறப்பு கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேனாம்பேட்டையில் இருந்து 2 இளைஞர்கள் பைக்கில் புறப்பட்டு வந்தனர். அப்போது, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மணல் ஏற்றிச் வந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. நுழைவாயில் முன் காத்திருந்த தொண்டர்கள் காலை 7 மணியளவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். திடலுக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைந்துள்ளது. விஐபிகள் மற்றும் மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு, இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிகப்படியான கூட்டம் இருக்கும் என்பதால் தற்காலிக செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மாநாடு நடைபெறும் பகுதியில் தற்போது சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.