India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் போது நிர்வாகிகள் 6 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கப்பை கிராமத்தில், 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கப்பை கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் மாநாடு என்பது ஒரு படத்தின் டிரைலர் போன்றது என்றும், முழு நீளக் கதையும் பார்த்த பின்பே படத்தைப் பற்றி சொல்ல முடியும் என்றும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடம் உள்ளது. அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி என்பதை பொறுத்திருந்து பார்த்த பின்புதான் கருத்துகள் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு முடிந்து வி.சாலை அருகில் உள்ள வீடுகளில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் தண்ணீர் வாங்கி அருந்தி வருகின்றனர். அனைவரும் மிகவும் சோர்ந்து தண்ணீர் அருந்தி வருகின்றனர். குடிக்க தண்ணீர் இல்லாத நிலையிலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சை கேட்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் நீண்ட நேரமாக நின்று தற்போது தண்ணீரை தேடி வந்து அருந்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் வி.சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் இதுவரை 8 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்கள் பலர் வந்து கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வேடம் அணிந்து வருகை தந்துள்ளனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் விஜயின் கட்சிக்கொடி போன்று தலைமுடியை செதுக்கியுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நாங்கள் தான், தளபதி தான், யார் வந்தாலும் பரவாயில்லை, நாங்கள் தான்’ என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின், முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தொண்டர்களில் சிலர் விஜய்யின் முகமூடியை அணிந்து கொண்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ளனர். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி அருகே ரயிலில் இருந்து குதித்து தொண்டர் ஒருவர் உயிரிழந்தார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அந்தத் தகவல் பொய்யானது, புதுக்கோட்டையைச் சேர்ந்த நிதிஷ்குமார் சொந்த ஊருக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே, விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மணிக்கு தொடங்க இருக்கும் மாநாடு, 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மாநாட்டை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், 8 மணிக்கே நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தற்போதே லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், முன்கூட்டியே மாநாடு தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.