Villupuram

News May 9, 2024

ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணை ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் இன்று நேரில் ஆய்வுசெய்தனர்.

News May 9, 2024

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (21) நேற்று (மே 8) மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார். அப்போது ஒருவர் இவரது மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓட முயன்றார். அவரை, மடக்கி பிடித்த முருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தொரப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (24) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரை கைதுசெய்தனர்.

News May 8, 2024

ஆட்சியர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 8, 2024

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் கணவர் சடலமாக மீட்பு

image

கோட்டக்குப்பம் அமீது நகரை சேர்ந்தவர் முகமது பாரூக் (50). இவரது மனைவி வகிதாபானு கோட்டக்குப்பம் 12ஆவது வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்தார். முகமது பாரூக் சின்ன கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் பார்ம் ஹவுஸில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரது அறையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 8, 2024

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கோடைக்கால வெப்பம் தொடர்பான சிகிச்சை பிரிவினை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 8, 2024

விழுப்புரம்: இடி விழுந்து ‘தீ’ பற்றிய தென்னை மரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(மே 8) அதிகாலை முதலே, இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி என்ற பகுதியில், இடி விழுந்து தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. மழையின் தாக்கம் இன்னும் குறையாமல், குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

News May 8, 2024

விழுப்புரம்: வாக்குப்பதிவு இயந்திர அறை கேமராவில் கோளாறு

image

விழுப்புரம் மக்களவைத் (தனி) தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள், அரசினர் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதில், இன்று (மே 7) 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. அரை மணி நேரம் கேமரா வேலை செய்யாத நிலையில் ஆட்சியர் ஆய்வில் இறங்கினார். சில தினங்களுக்கு முன்பு இதே போன்று மின்னழுத்தம் காரணமாக சிசிடிவி வேலை செய்யாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

News May 8, 2024

விழுப்புரம்: பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர்

image

கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழை நீர் தேங்கி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துகள் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. கோடை மழையால் குளிர் காற்று வீசி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

News May 8, 2024

தி.நல்லூர்: பள்ளியில் ஒருவர் உயிரிழப்பு

image

திருவெண்ணைநல்லூர் வட்டம், தி. புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளைநிலை உதவி ஆய்வாளராக பணிபுரியும் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தரபெருமாள் என்பவர் பள்ளி வளாகத்தில் உள்ள தனது இருக்கையில் இன்று (மே 7) இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 8, 2024

விழுப்புரம்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, விழுப்புரத்தில் மே 11ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.