India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வெளியாகியுள்ளது. (மி.மீ.) கெடார்- 35, முகையூர்- 33, விழுப்புரம்- 29, சூரப்பட்டு- 25, வானூர்- 19, முண்டியம்பாக்கம்- 19, அனந்தபுரம்- 17, செஞ்சி-14, நேமூர்- 11, திண்டிவனம்- 10, மணம்பூண்டி- 9, கஞ்சனூர்- 8.4, கோலியனூர், வல்லம், மரக்காணம்- 6, வளவனூர், அரசூர்- 5, வளத்தி- 4, திருவெண்ணெய்நல்லூர்- 3, அவலூர்பேட்டை- 2மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மற்றும் மதிய உணவு திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் ஆய்வு கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நேற்று நடந்தது. ஆட்சியர் பேசுகையில், “பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை இடையே நவம்பர் 3ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் காலை 10.15க்கு புறப்படும் ரயில், மாலை 6.30க்கு மதுரை சென்றடையும். இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (02.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் தீபாவளியன்று, ராக்கெட் வெடி வெடித்தபோது ஒரு வைக்கோல்போர் மற்றும் கூரை வீடு தீயில் கருகி நாசமானது. அதேபோல், செஞ்சி மற்றும் அன்னியூரில் தலா ஒரு வீடு தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
விழுப்புரம் மாவட்டம் ஆற்பிசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவர், தனது நண்பர் பசுபதியுடன் பைக்கில் புதுச்சேரி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். கெங்கராம்பாளையம் அருகே சுற்றுலா வேன் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் ராகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பசுபதி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்.31ஆம் தேதி தீபாவளி அன்று அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக, பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒலக்கூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், வானூர், ரோஷனை, மரக்காணம் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், வளவனூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உட்பட மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளி, போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், மனநலம் பாதித்தோர் இல்லங்கள் மற்றும் விடுதிகளை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். இதுவரை பதிவு செய்யாமல் செயல்படும் இல்லம், விடுதிகளை பதிதாக விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது என விழுப்புரம் ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.