Villupuram

News May 11, 2024

எஸ்ஐ சஸ்பெண்ட்: விழுப்புரம் எஸ்பி அதிரடி

image

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் குற்ற வழக்கு விசாரணையில் முறைகேடாக நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ், பணியில் முறைகேடாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை சஸ்பெண்ட் செய்து நேற்று (மே 10) உத்தரவிட்டார்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

விழுப்புரம் அருகே பிரபல நடிகர்

image

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று திரைப்பட இயக்குனர், நடிகருமான சமுத்திரக்கனி சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் வழக்கப்படி சாமி தரிசனம் செய்த சமுத்திரக்கனி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

News May 10, 2024

10வது இடம் பிடித்து விழுப்புரம் மாவட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் விழுப்புரம் 6வது இடம் பெற்றுள்ளது. சென்ற 2022.2023 கல்வியாண்டில் 90.57 சதவிதம் பெற்று, மாநில அளவில் 24வது இடத்தில் இருந்த விழுப்புரம், தற்போது 3.54 சதவீதம் உயர்ந்து 94.11 சதவீதம் பெற்று மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது.

News May 10, 2024

10th RESULT: விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 94.11% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.28% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.04% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

விழுப்புரம் அருகே கோடை மழை

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் ஒரு சில இடங்களில் கோடை மழை நேற்று வெளுத்து வாங்கியது. மழையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் கோடை நோய்கள் சற்று தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 10, 2024

விழுப்புரம்: பாஜகவில் இணைந்த திமுக வார்டு கவுன்சிலர்

image

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த, திமுக வார்டு உறுப்பினர் முத்துராமன், ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நேற்று (மே 9) விழுப்புரம் தெற்கு பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். உடன் மண்டல் தலைவர் ரவிச்சந்திரன், மண்டல் பார்வையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News May 9, 2024

விழுப்புரத்தில் சிசிடிவி ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட ஆட்சியர் பழனி அங்கு நேரில் சென்று சிசிடிவி கேமராக்களின் பட காட்சிகளை ஆய்வு செய்தார்.

News May 9, 2024

விழுப்புரம்: பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

image

மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோயில் பின்புறம் அருள்பாண்டியன் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று அதன் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் 4 பெண்கள் வானவெடி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு திரியில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அதன் உரிமையாளர் ராஜேந்திரன், கௌரி மற்றும் ஆண்டாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

News May 9, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.