Villupuram

News May 13, 2024

விழுப்புரம் : மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

விழுப்புரம்: 60 பேருடன் சென்ற பேருந்து விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூச்சி குளத்தூர் கூட்ரோட்டில் இன்று சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 13, 2024

விழுப்புரம்: 1 எஸ்ஐ, 3 ஏட்டுகள் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மது கடத்தியவர்களிடம் வழக்குப்பதிவு செய்யாமல் ரூ.7000 லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன், தலைமை காவலர்கள் நாகராஜ், புஷ்பராஜ், சுரேஷ் ஆகிய நான்கு பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News May 12, 2024

விழுப்புரம்: 1 எஸ்ஐ, 3 ஏட்டுகள் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மது கடத்தியவர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல் ரூ.7000 லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமை காவலர்கள் நாகராஜ், புஷ்பராஜ் சுரேஷ் ஆகிய நான்கு பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News May 12, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் சேகரிக்கப்பட்ட வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அரசினர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குறித்த வருகை பதிவேடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார்.

News May 12, 2024

விழுப்புரம்: ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டதுடன், அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

News May 12, 2024

விழுப்புரம் எஸ்பி அதிரடி

image

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் குற்ற வழக்கு விசாரணையில் முறைகேடாக நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ், பணியில் முறைகேடாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை சஸ்பெண்ட் செய்து நேற்று (மே 10) உத்தரவிட்டார்.

News May 12, 2024

விழுப்புரம்: மே.14 வரை பார்க்கலாம்

image

கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அதன்படி விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.

News May 11, 2024

செஞ்சியில் அமைச்சர் ஆய்வு

image

செஞ்சி பேரூராட்சி சார்பில், செஞ்சி கூட்டு சாலை திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் மற்றும் சென்னை பேருந்து நிறுத்தத்தில் கோடை வெயில் தாக்கம் கடுமையாக உள்ளதால் மக்கள் நலன் கருதி பசுமை கூரை அமைக்கப்பட்டதை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் (மே 11) நேரில் பார்வையிட்டார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் இருத்தனர்.

News May 11, 2024

விழுப்புரம் மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.