Villupuram

News November 5, 2024

துணை முதல்வர் வருகை ஏற்பாடுகள் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துணை முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் இன்று (04.11.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட டிஆர்ஓ மு.பரமேஸரி இருந்தார்

News November 4, 2024

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக 53,600 வாகனங்கள் பயணம் 

image

தொடர் விடுமுறை முடிவடைந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்றன. இந்நிலையில் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 3-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக 53,600 வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 4, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வெளியாகியுள்ளது. (மி.மீ.) அளவில், அவலூர்பேட்டை- 48, விழுப்புரம், வளவனூர்- 5, செஞ்சி-4.5, கோலியனூர், வானூர்- 4, அரசூர்- 3.5, சூரப்பட்டு, நேமூர், கெடார், செம்மேடு, வளத்தி, திருவெண்ணெய்நல்லூர்-2, முண்டியம்பாக்கம்- 1.5, கஞ்சனூர்- 1 என மழை பதிவாகியுள்ளது.

News November 4, 2024

விழுப்புரம் அருகே விபத்து; மரணம் 

image

சென்னை பள்ளிக்கரணை பாலகிருஷ்ணன் மகன் மாதேஷ், உமாபதி மகன் அருண் ஆகியோர் ஆலகிராம சங்கர் மகன் நித்திஷ் என்பவருடன் டூ-வீலரில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திண்டிவனம் அருகே கொணக்கம்பட்டில் எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதி மாதேஷ் பலியானார். படுகாயம் அடைந்த 2 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 4, 2024

விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் 

image

விழுப்புரம் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, நேற்று வட, தென் மாவட்ட வாகனங்கள் சென்னை நோக்கி அதிகளவில் சென்றதால், விழுப்புரம் புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் தொடங்கி முத்தாம்பாளையம் சந்திப்பு வரை தொடர்ச்சியாக வாகனங்கள், அணி வகுத்துச் சென்றன.

News November 3, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வெளியாகியுள்ளது. (மி.மீ.) கெடார்- 35, முகையூர்- 33, விழுப்புரம்- 29, சூரப்பட்டு- 25, வானூர்- 19, முண்டியம்பாக்கம்- 19, அனந்தபுரம்- 17, செஞ்சி-14, நேமூர்- 11, திண்டிவனம்- 10, மணம்பூண்டி- 9, கஞ்சனூர்- 8.4, கோலியனூர், வல்லம், மரக்காணம்- 6, வளவனூர், அரசூர்- 5, வளத்தி- 4, திருவெண்ணெய்நல்லூர்- 3, அவலூர்பேட்டை- 2மழை பதிவாகியுள்ளது.

News November 3, 2024

காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மற்றும் மதிய உணவு திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் ஆய்வு கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நேற்று நடந்தது. ஆட்சியர் பேசுகையில், “பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

News November 3, 2024

விழுப்புரத்தில் பேருந்து விபத்து: உயிர் தப்பிய பயணிகள்

image

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2024

விழுப்புரம் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை இடையே நவம்பர் 3ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் காலை 10.15க்கு புறப்படும் ரயில், மாலை 6.30க்கு மதுரை சென்றடையும். இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

News November 2, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (02.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!