India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் இருந்து தினந்தோறும் காலை 5.35க்கு புறப்படவேண்டிய விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் (16854), நவம்பர் 30ம் தேதி வரை 2 மணி நேரம் தாமதமாக காலை 7.35க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த ரயில் தாமதமாகவே வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில், 22 வயதுக்குட்பட்டோருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அணியினர் மயிலாடுதுறை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய அணிகளை கால் இறுதியில் வென்று, அரை இறுதியில் புதுக்கோட்டை அணியினரை 25-17, 25-22, 25-14 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்பட உள்ள திருச்சி-விழுப்புரம் ரயில் (06892), விருதாச்சலம்-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த ரயில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக விருத்தாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சி.விசண்முகம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கான மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து, விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில் (06891) வரும் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திருச்சி – பொன்மலை இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, ரயிலானது பொன்மலையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக திருச்சி – விழுப்புரம் ரயில் (06982) மாலை 6:09 மணிக்கு மீண்டும் பொன்மலையிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த ஆண்டு 2023, ஜூலை 20-ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வானூர் அருகே உள்ள பாப்பாஞ்சாவடியைச் சேர்ந்த மகளிர் அணி கிளை செயலாளர் மல்லிகா, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சசிகலா, “மல்லிகா உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சகோதரி மல்லிகா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு (06190) வாரத்தில் 5 நாட்கள் (செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரத்தில் காலை 9:55 மணிக்கும், திண்டிவனத்தில் காலை 10:33 மணிக்கும், மேல்மருவத்தூரில் 10:58 மணிக்கும், செங்கல்பட்டில் 11:28 மணிக்கும், தாம்பரத்துக்கு மதியம் 12:30 மணிக்கு சென்றடையும்.
செஞ்சி அமமுக மாவட்ட துணைச் செயலாளர் அசோக்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அதிமுக மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதில், விழுப்புரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.ஆர். பிரித்விராஜ் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அடையாள உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், வளைகாப்பு விழாவுக்காக பேருந்தில் திருவண்ணாமலைக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அதே பேருந்தில் செஞ்சி வழியாக திண்டிவனத்துக்கு வந்து கொண்டிருந்தனர். ஆற்றுப் தொண்டியாற்றுப்பாலத்தில் சென்றபோது திடீரென தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.