Villupuram

News May 21, 2024

ஒன்றுகூடி தேர் இழுத்த பக்தர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் எம்.ஜி.ஆர் நகர் மகா மாரியம்மன் ஆலய ரத உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் இன்று முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 21, 2024

செஞ்சி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

image

செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சுமார் 2.00 மணி அளவில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் செஞ்சி சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் இன்று செஞ்சி ஶ்ரீ கமலக்கன்னியம்மன் தேர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

News May 21, 2024

விழுப்புரம் அமைதியான ஆரோவில் குறிப்பு!

image

ஆரோவில் என்பது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய அரசின் மேற்பார்வையிலுள்ள இந்த ஆரோவில் மதக்கோட்பாடுகள், நாட்டுப்பற்று என அனைத்தையும் கடந்து அமைதியை மட்டும் மையமாக வைத்து வாழக்கூடிய நகரமாக இருக்க அமைத்ததே ஆரோவில். பிப்.28, 1968 ஆம் ஆண்டு ஆரோவில் நகரத்தைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு நாடு முழுதும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து 5000 பேர் வந்து கூடினர்.

News May 21, 2024

விழுப்புரம் அருகே மூதாட்டி கழுத்து அறுத்து கொலை

image

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தில் இருளர் காலனி குடியிருப்பில் வசித்துவந்த சின்னத்தம்பி என்பவரது மனைவி சகுந்தலா (72). இந்நிலையில் சகுந்தலா நள்ளிரவில் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். மேலும், அவர் அணிந்திருந்த தலா 1 பவுன் செயின், மூக்குத்தி பறிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி, இந்தக் கொலை நகைக்காக நடந்ததா? வேற ஏதாவது காரணமா? என விசாரித்துவருகின்றனர்.

News May 21, 2024

விழுப்புரம் மழைக்கு வாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

குடிநீர் தட்டுப்பாட்டினை தடுக்க முன்னெச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடித்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் துவங்குதல் குறித்த மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 20, 2024

விழுப்புரத்தில் கஞ்சா வழக்குகள்: 56 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 48 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
56 பேர் கைது செய்யப்பட்டு 63 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 283 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 292 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News May 20, 2024

விழுப்புரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்துவது எப்படி என்று விவாதிக்கப்பட்டது.

News May 20, 2024

தடுப்பு கட்டையில் மோதி பேருந்து விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி சாலையில் இன்று (மே 20) கெங்கராம்பாளையம் மல்ராஜன்குப்பம் வளைவில்
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவருக்கு பற்கள் முழுவதும் உடைந்துவிட்டது.
பெண் ஒருவருக்கு கண் புருவத்தில் பலத்த அடி,
ஒரு மூதாட்டிக்கு கண்ணில் அடிபட்டது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News May 20, 2024

விழுப்புரம் அருகே மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், கெங்கராயபாளையம் துணைமின் நிலையம் பகுதியில் நாளை (மே 21) காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஆழியூர், எல்.ஆர்.பாளையம், கரைமேடு, பள்ளி கொண்டாபுரம், பள்ளிநேளியனூர், கெங்கராபாளையம், மல்ராஜன்குப்பம், வி.புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.