Villupuram

News November 7, 2024

விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 7, 2024

இளைஞர் அணி சார்பில் உதயநிதிக்கு வெள்ளி வாள் பரிசு

image

விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். இதனை அடுத்து அவருக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் வெள்ளி வாள் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வின் போது விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கௌதம சிகாமணி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News November 7, 2024

“பொதுமக்களின் மனுக்களை காகிதங்களாக பார்க்கக்கூடாது”

image

விழுப்புரம் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் துணை முதல்வர், “பொதுமக்களின் மனுக்களை காகிதங்களாக பார்க்காமல், கோரிக்கைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டமாகும். இங்கு விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்பவர்கள்தான் அதிகம். மக்கள் பணிகளை செய்வதை அரசு அலுவலர்கள் தங்களது முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

News November 6, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (06.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News November 6, 2024

துணை முதலமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி மனு

image

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், “சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், அத்தகைய விதியானது 2011ஆம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ளது. அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

News November 6, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள துணை முதல்வர் இன்று விழுப்புரம் மாவட்டத்தின் ஆட்சியரகத்தில் மேற்கொண்டார். அப்போது, அரசு சான்று திட்டங்களைப் பற்றியும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். மேலும் முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளைப் பற்றியும் சம்பந்தப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தார். முடிவு பெறாத கோப்புகளை முடிக்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News November 6, 2024

அயராது உழைத்திட வேண்டும் : உதயநிதி பேச்சு

image

விழுப்புரத்தில் இன்று திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும் என்ற முதல்வர் இலக்கை மனதில் ஏந்தி அயராது உழைத்திட வேண்டும். மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளை என கட்சி அமைப்புகளும், 23 சார்பு அணிகளும் அயராது பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

News November 6, 2024

துணை முதல்வர் செய்தியாளருக்கு பேட்டி

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் வளர்ச்சி பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், முடிவு பெறாத பணிகள் குறித்தும் முழுமையாக கேட்டு அறியப்பட்டது. மாவட்டத்தில் முழுமை பெறாத பணிகளுக்கு கால அவகாசம் அளித்துள்ளேன். அப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்று துணை முதல்வர் பேட்டி அளித்துள்ளார். 

News November 6, 2024

குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ராமதாஸ் அறிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம்’ என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

News November 6, 2024

கந்த சஷ்டியை முன்னிட்டு விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில்கள்

image

கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.30க்கு புறப்படும் ரயில், விழுப்புரம், திருச்சி மதுரை, விருதுநகர் வழியாக நாளை காலை 8.30க்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக, அதேநாள் இரவு 10.15க்கு திருச்செந்தூரில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக பயணித்து, 8ஆம் தேதி காலை 10.30க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

error: Content is protected !!