Villupuram

News November 8, 2024

விழுப்புரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு 

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நவம்பர் 8 முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 11, 13 ஆகிய தேதிகளில், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

விழுப்புரம் அருகே 6 பேரை கடித்த வெறிநாய்

image

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவிதா, அலமேலு மற்றும் சங்கர் ஆகிய விவசாய கூலித் தொழிலாளர்கள் மூவரும் வியாழக்கிழமை ஒலக்கூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு சாலையில் திரிந்து கொண்டிருந்த வெறிநாய் திடீரென அவர்களை துரத்திச் சென்று கடித்ததில் மூவரும் காயமடைந்தனர்.இதேபோல பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்களையும் நாய் கடித்தது.

News November 8, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக்கடன் முகாம் வருகிற 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் செஞ்சி ஆலம்பூண்டியில் உள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்கும் முகாம் தொடர்பாக மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ் 

image

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் 5,000க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

பாமகவினர் 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

image

விழுப்புரத்தில் பாமகவினர் 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி பாமக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று விழுப்புரத்தில் அனுமதியின்றி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக, மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி உள்ளிட்ட 150 பேர் மீது, விழுப்புரம் போலீசார் வழக்கு பதிது செய்தனர்.

News November 7, 2024

முண்டியம்பாக்கம் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி

image

சென்னையில் இருந்து திருச்சிக்கு உரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, இன்று காலை விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் ஏற்றிச்சென்ற உரம் முட்டைகள் சாலையில் சிதறியது. இந்த விபத்தில், உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

News November 7, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. திருவெண்ணைநல்லூர், சித்தலிங்க மடம், புதுப்பாளையம், மெய்யூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 7, 2024

மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை உயிரிழப்பு

image

வானூர், நல்லாவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த். – உமாமகேஸ்வரிக்கு பெண் குழந்தை உள்ளது. பிறந்து 45 நாட்களேயான தனது குழந்தைக்கு உமா தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வானூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2024

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாதன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராகினர். மற்ற 4 பேர் ஆஜராகவில்லை. மேலும், அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை டிச.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவரசன் (பொது) உத்தரவிட்டார்.

News November 7, 2024

தோல் மற்றும் தலைமுடிக்கு இலவச பரிசோதனை முகாம்

image

விழுப்புரம் நகரில், தோல் மற்றும் தலை முடிக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம், வரும் நவ.10ஆம் தேதியை ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, திருச்சி சாலையில் (கலெக்டர் அலுவலகம் எதிரே) கமல் நகர் இ.ஆர். குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோல் மற்றும் தலைமுடி பிரச்னைகளை மருத்துவரிடம் தெரிவித்து இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!