India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த ஆண்டு 2023, ஜூலை 20-ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வானூர் அருகே உள்ள பாப்பாஞ்சாவடியைச் சேர்ந்த மகளிர் அணி கிளை செயலாளர் மல்லிகா, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சசிகலா, “மல்லிகா உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சகோதரி மல்லிகா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு (06190) வாரத்தில் 5 நாட்கள் (செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரத்தில் காலை 9:55 மணிக்கும், திண்டிவனத்தில் காலை 10:33 மணிக்கும், மேல்மருவத்தூரில் 10:58 மணிக்கும், செங்கல்பட்டில் 11:28 மணிக்கும், தாம்பரத்துக்கு மதியம் 12:30 மணிக்கு சென்றடையும்.
செஞ்சி அமமுக மாவட்ட துணைச் செயலாளர் அசோக்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அதிமுக மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதில், விழுப்புரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.ஆர். பிரித்விராஜ் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அடையாள உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், வளைகாப்பு விழாவுக்காக பேருந்தில் திருவண்ணாமலைக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அதே பேருந்தில் செஞ்சி வழியாக திண்டிவனத்துக்கு வந்து கொண்டிருந்தனர். ஆற்றுப் தொண்டியாற்றுப்பாலத்தில் சென்றபோது திடீரென தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துணை முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் இன்று (04.11.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட டிஆர்ஓ மு.பரமேஸரி இருந்தார்
தொடர் விடுமுறை முடிவடைந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்றன. இந்நிலையில் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 3-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக 53,600 வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வெளியாகியுள்ளது. (மி.மீ.) அளவில், அவலூர்பேட்டை- 48, விழுப்புரம், வளவனூர்- 5, செஞ்சி-4.5, கோலியனூர், வானூர்- 4, அரசூர்- 3.5, சூரப்பட்டு, நேமூர், கெடார், செம்மேடு, வளத்தி, திருவெண்ணெய்நல்லூர்-2, முண்டியம்பாக்கம்- 1.5, கஞ்சனூர்- 1 என மழை பதிவாகியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பாலகிருஷ்ணன் மகன் மாதேஷ், உமாபதி மகன் அருண் ஆகியோர் ஆலகிராம சங்கர் மகன் நித்திஷ் என்பவருடன் டூ-வீலரில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திண்டிவனம் அருகே கொணக்கம்பட்டில் எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதி மாதேஷ் பலியானார். படுகாயம் அடைந்த 2 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, நேற்று வட, தென் மாவட்ட வாகனங்கள் சென்னை நோக்கி அதிகளவில் சென்றதால், விழுப்புரம் புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் தொடங்கி முத்தாம்பாளையம் சந்திப்பு வரை தொடர்ச்சியாக வாகனங்கள், அணி வகுத்துச் சென்றன.
Sorry, no posts matched your criteria.