Villupuram

News November 6, 2024

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நினைவு பரிசு

image

திருவண்ணைநல்லூரில் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவ சிலையை துணை முதலமமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர், துணை முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர்.

News November 5, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 5, 2024

விழுப்புரத்துக்கு நவ.8ல் மஞ்சள் எச்சரிக்கை

image

நவ.8ஆம் தேதி விழுப்புரம் உள்ளிட்ட 9 தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.5) விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 5, 2024

விழுப்புரத்தில் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

image

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வெளியாகியுள்ளது. அதன்படி (மி.மீ.), அவலூர்பேட்டை -23, முகையூர்-11, மணம்பூண்டி-11, கெடார்-10, கஞ்சனூர்-3.3, அனந்தபுரம்-3, நேமூர்-1.8 என பதிவாகியுள்ளது.

News November 5, 2024

உற்சாக வரவேற்புக்கு தயாராகும் திமுகவினர்

image

விழுப்புரத்துக்கு இன்று மாலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நாளை காலை அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். துணை முதல்வராக பதவி ஏற்று முதன் முறையாக விழுப்புரத்துக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவற்பு அளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

News November 5, 2024

விழுப்புரம்-திருப்பதி ரயில் தாமதமாக புறப்படும்

image

விழுப்புரத்தில் இருந்து தினந்தோறும் காலை 5.35க்கு புறப்படவேண்டிய விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் (16854), நவம்பர் 30ம் தேதி வரை 2 மணி நேரம் தாமதமாக காலை 7.35க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த ரயில் தாமதமாகவே வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

விழுப்புரம் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

image

வேலூரில், 22 வயதுக்குட்பட்டோருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அணியினர் மயிலாடுதுறை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய அணிகளை கால் இறுதியில் வென்று, அரை இறுதியில் புதுக்கோட்டை அணியினரை 25-17, 25-22, 25-14 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

News November 5, 2024

விழுப்புரம் வரவேண்டிய ரயில் விருத்தாச்சலத்தில் நிறுத்தப்படும்

image

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்பட உள்ள திருச்சி-விழுப்புரம் ரயில் (06892), விருதாச்சலம்-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த ரயில்  விருதாச்சலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக விருத்தாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News November 5, 2024

சி.வி. சண்முகத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

image

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சி.விசண்முகம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கான மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து, விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News November 5, 2024

விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில் பகுதி அளவில் ரத்து

image

ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில் (06891) வரும் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திருச்சி – பொன்மலை இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, ரயிலானது பொன்மலையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக திருச்சி – விழுப்புரம் ரயில் (06982) மாலை 6:09 மணிக்கு மீண்டும் பொன்மலையிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.