Villupuram

News November 15, 2024

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 

image

விழுப்புரம் கோட்ட அளவில், நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 19.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் விக்கிரவாண்டி, வானூர், மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களை சார்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 15, 2024

விழுப்புரத்தில் நாளைய மின்தடை ரத்து

image

வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் வருகின்ற (16.11.2024) சனிக்கிழமையன்று நடைபெறுகின்ற காரணத்தினால் அன்று நடைபெறுவதாக இருந்த விழுப்புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை இருக்காது மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

சிறந்த பள்ளியாக பனையபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தேர்வு

image

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறந்த 3 பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளுக்கான கேடயத்தை பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாவிடம் வழங்கினார். 

News November 15, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு மண்டபம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றை முதல்வர் திறக்க உள்ளதாகவும், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி சிலை திறப்பு விழாவிழும் பங்கேற்பார் என பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

News November 15, 2024

யானை தந்தத்தாலான பொம்மைகள் பறிமுதல்

image

விழுப்புரத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான யானைத் தந்தத்தாலான 4 பொம்மைகள் நேற்று சிக்கியுள்ளன. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தாங்கும் விடுதியில் யானை பொம்மைகளை பேரம் பேசி விற்கும்போது பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை வனத்துறையினர் பிடித்து, யானை தந்தம் எப்படி வந்தது? யார் மூலம் வாங்கப்பட்டது? இதிலோ யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

News November 15, 2024

முகையூர் பகுதியில் இன்று அமைச்சர் பங்கேற்க உள்ளார்

image

முகையூர் ஊராட்சி ரயில்வே நகர் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” 2ஆம் கட்டம் துவக்க விழா (நவ 15) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நெற் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும் என்று வேளாண்மைதுறை தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை பேரிடர் பாதிப்பிலிருந்து உரிய நிவாரணம் கிடைக்க விரைந்து காப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவும்

News November 14, 2024

அனுமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்பி ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆய்வு செய்தார்,சராசரியாக 100 புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாதத்துக்கு 5 முதல் 10 வரை மகப்பேறுகள் நடக்கின்றன. 2 மருத்துவர்கள் உள்ளனர். பழைய கட்டடங்கள் ஒழுகுவதால் புதிய கட்டடம் வேண்டுமென கேட்டனர். புதிய கட்டிடம் கட்டி தர உறுதி அளித்தார்.

News November 14, 2024

தாழங்காடு நியாய விலை கடை ஆய்வு மேற்கொண்ட எம்பி

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள தாழங்காடு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டினை வீதியில் இருந்து கட்டப்படக்கூடிய நியாய விலை கடையை ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவருடன் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.   விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!