India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரத்தில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே அனுமதி பெற்றதாகக் கூறிய பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பாஜகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளர் ஒருவரை திமுகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 51 போலீசாரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, செஞ்சி மதுவிலக்கு பிரிவு ஏட்டு புனிதா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், ஏட்டு கந்தன் தி.வெ.நல்லூர் காவல் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு ஏட்டு ஏழுமலை மேல்மலையனூர் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608117>>தொடர்ச்சி<<>>

விழுப்புரம் அருகே இன்று காலை 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெஞ்சிசாலையில் விதை பண்ணை என்ற இடத்தில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.