Villupuram

News November 17, 2024

வீரப்பாண்டியில் கிருத்திகை முருகன் வழிபாடு

image

கண்டாச்சிபுரம் வட்டம், வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளும் பழமையான அருள்மிகு சௌந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் திருக்கோயிலில், இன்றைய கிருத்திகை நாளில் பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் முருகப் பெருமானுக்கு செய்யப்பட்டு, முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

News November 16, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

image

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கு தேவையான நீட் (NEET) தேர்விற்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட பலர் இருந்தனர். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

News November 16, 2024

சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயம்

image

விழுப்புரத்தில் 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, விழாவினை தொடங்கி வைத்து, சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர், கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களை வழங்கினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News November 16, 2024

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேர் தேர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில், இளம்பெண்கள் பயன்பெறும் வகை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான முகாம் நேற்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். தகுதி அடிப்படையில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

News November 16, 2024

புதிய வாக்காளர் படிவ விவரம்: பதிவு செய்யும் முறைகள்

image

வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள். படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திற

News November 16, 2024

வாக்காளர் பட்டியலில் மாற்றமா? சேர்க்கணுமா?

image

18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் Form-6 மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் செய்யலாம்.

News November 16, 2024

விழுப்புரத்தில் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, விழுப்புரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 16, 2024

அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் பொன்முடி

image

விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கவில்லை என அமைச்சரிடம் முறையிட்டனர். அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் “ஏன் இன்னும் பட்டா வழங்கவில்லை” எனகே கேட்டு கண்டித்தார். பின், “முதல்வர் வருகைக்கும் பட்டா வழங்குங்கள் எனத் தெரிவித்தார்.

News November 16, 2024

விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா

image

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி , மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி ஆகியோர் தலைமையில் இன்று (16.11.2024) காலை 11.00 மணிக்கு விழுப்புரம் கரும்பு திருமணம் மண்டபத்தில் (காட்பாடி மேம்பாலம் அருகில்) கூட்டுறவுத் துறை சார்பில் 71 – வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா – 2024 நடைபெறுகிறது. விழாவில் கூட்டுறவு வளர்ச்சி பற்றி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

News November 15, 2024

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 

image

விழுப்புரம் கோட்ட அளவில், நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 19.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் விக்கிரவாண்டி, வானூர், மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களை சார்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!