India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய துணை குடியரசுத் தலைவர் அனைத்து உலக தாய்மொழி நாளையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு நேற்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழில் கடிதம் எழுதியதற்கு நன்றி எனவும், பாராளுமன்றத்தின் முக்கிய ஆவணங்களை எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்க வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யச் சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணனை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மாதம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. விசாரணையில், இவற்றை பெங்களூரிலிருந்து கடத்தியது போலீசாருக்கு தெரிய வந்தது.
பிப்ரவரி 22 உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும், கல்வி அலுவலகங்களிலும் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் சிறப்பு காவல் படையினர், பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று டாட்டா ஏசி வேனை சோதனை செய்தனர். அப்போது, அந்த வேனில் கர்நாடகாவிலிருந்து கடத்திவரப்பட்ட 210 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி இயந்திரம், மருந்துகளை வைப்பதற்கான பெட்டிகளைத் தயார் செய்தல் போன்ற பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிப்.24ஆம் தேதி இந்த மருந்தகங்களை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
வரும் 02-03-2025 முதல் 12-03-2025 வரை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சித் திடலில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியையொட்டி பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தினந்தோறும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்போர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கோயிலில், இரு தரப்பினரையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உத்தரவிட்டு இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருக்கோவிலூரை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி திருக்கோவிலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. தனி மாவட்டமாக அறிவிக்க கோரி அனைத்து கட்சி சார்பாகவும், வழக்கறிஞர்கள் சார்பாகவும், தன்னார்வ சார்பாகவும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.
Sorry, no posts matched your criteria.