Villupuram

News February 23, 2025

மயிலம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பாலமுருகன். நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று கோபாலபுரம் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 22, 2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று (பிப்.,22) மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் 22.02.2025 நடைபெற்றது.

News February 22, 2025

26 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா

image

ஆண்டுதோறும் மாசி மாதம் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும் .அந்த வகையில் விழுப்புரம் பிரஹன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் வரும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 22, 2025

உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்

image

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், நேற்று இரவு பொதுமக்கள் அமரும் இடத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். விரைந்து  வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

News February 22, 2025

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு தமிழக அரசு சார்பில் மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை விழுப்புரம் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து, கலெக்டர் அலுவலகத்தில் மே ஒன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

விழுப்புரம் நீதிமன்றத்தில் 37 சிறார்கள் ஆஜர்

image

சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில் கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 53 சிறாரில் 37 பேர் ஆஜராகினர்.

News February 22, 2025

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி கயத்தாரைச் சேர்ந்த ஜானகிராமன் புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியை ஜானகிராமன் அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 20 ஆண்டுகள் தண்டனை விதித்தது.

News February 22, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 21, 2025

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஈஸ்வர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!