India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது என, தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்; 1400 கட்டுமான தொழிலாளர்களுக்கு, திண்டிவனம், மொளசூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில், வரும் 15ம் தேதி இந்த பயிற்சி துவங்கும் எனவும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரம் வரை செல்லும் Rockfort Express, Madurai Express ரயில்கள், வருகின்ற செப்.17ம் தேதி முதல் பழையபடி சென்னை எழும்பூர் வரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் காரணமாக தாம்பரம் வரைச் சென்ற நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் செப்.17 முதல் எழும்பூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த மஹதி என்ற முதியவரிடம், அரண்மனை கட்ட ஒப்பந்தம் செய்து, 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மயிலாடுதுறை பூம்புகார் பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சித்தார்த் என்பவரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பணத்தை பெற்றுக்கொண்டு கட்டிடம் கட்டாமல் சித்தார்த் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், பாமகவில் எல்லா அதிகாரமும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. வழக்கறிஞர் பாலு தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி வருகின்றார். மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் பாலுவை வன்மையாக கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம் என்றார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
செஞ்சி அடுத்த பசுமலைதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நமச்சிவாயம், அவரது மனைவி பத்மாவதி இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பத்மாவதி கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். நமச்சிவாயம் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2025 தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று செப். 20ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுகொண்டுள்ளார்.
விழுப்புரம் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். SHARE பண்ணுங்க!
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.