India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்டி. பார்ம்சி சான்று பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.mudhalvarmarndhagam.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுவரை, ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
கலை பண்பாட்டு துறை சார்பில், இசைக்கருவிகள் மற்றும் கலை உபகரணங்கள் வழங்கும் விழா, விழுப்புரம் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வரும் சனிக்கிழமை (நவ.23) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈச்வரன் பட்டதிரி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு கலை உபகரணங்களை வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
ராஜாம்புலியூர் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றியுள்ள அனைத்து பொதுமக்களின் வாகனங்களுக்கும் இலவச அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வணிகர் சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படாத காரணத்தால், நாளை (நவ.23) முழு கடை அடைப்பு மற்றும் டோல்கேட் முற்றுகைப் போராட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்தூா்பேட்டை அருகே இரு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு கோவையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி பாதூா் பகுதி அருகே வந்தபோது, நாமக்கல் நோக்கிச் சென்ற மற்றோரு லாரி பின்பக்கத்தில் மோதியது. இதில், நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநர் வெங்கடேசுவரன் (26) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சக்தி இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில், இன்று மாலை, டிட்டோஜாக் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தஞ்சை மாவட்ட அரசு பள்ளியில் பணிபுரிந்த தற்காலிக தமிழ் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கடலோர பகுதிகளான பிள்ளைச்சாவடி, சோதனைகுப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்னமுதலியாா்சாவடி, ஆரோவில், பொம்மையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக இந்த ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகையானது நடத்தப்பட்டது.
பெங்களூரில் உள்ள அத்திபள்ளியில், கடந்த 17ஆம் தேதி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் எம்.எஸ். சிலம்பாட்ட கழகத்தின் மாணவர்கள் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், ஒற்றை கம்பு சிலம்பாட்ட பிரிவில் 35 மாணவர்கள் பங்கு பெற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களையும் பிடித்து, பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை வென்றனர்.
திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புதுவை மாநிலம் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பவானி – பிரகாஷ் தம்பதியினரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். 1.300 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இவர்களை சிறையில் அடைத்தனர்.
அரகண்டநல்லூர் அருகே உள்ள கீழையூர் அருள்மிகு சிவானந்தவல்லி உடனுறை ஸ்ரீ வீரடேஸ்வரர் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மற்றும் ஆய்வாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உண்டியலில் உள்ள பொருட்களை எண்ணினார்கள்.
Sorry, no posts matched your criteria.