India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து மார்ச் 3ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. வீடூர் அணை நீர் திறப்பு மூலம் 3,200 ஏக்கர் பாசனப்பரப்புகள் பாசனவசதி பெறும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
மினி பஸ் கட்டணம் திருத்தம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவித்து அனுமதி சீட்டு ஒப்படைக்க வேண்டும். புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் ஒன்றரை கிலோ மீட்டர் கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக இருக்க வேண்டும். புதிய வழித்தட வரைபடம் கொண்ட விண்ணப்பங்கள் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம் எனக் கலெக்டர் கூறியுள்ளார்.
அரகண்டநல்லூர் அருகே இரு தினங்களுக்கு முன்பு பசுமாட்டை தேடிச் சென்ற சிறுவன், மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தொடா்ந்து, நில உரிமையாளரான நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த அ.புவனேசுவரனை (42) பிடித்து விசாரித்தனர். இதில், தனது நிலத்தில் கோபி (42), ஜெ.காளிதாஸ் (30) ஆகியோர் உதவியுடன் மின்வேலி அமைத்தது தெரிய வந்தது. மூவர் மீதும் வழக்குப் பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அங்காளம்மன் ஆலய மயான கொள்ளை திருவிழா சாமி ஊர்வலத்தின் போது கலெக்டர் உத்தரவை மீறி கட்சிக் கொடிகளுடன் சிலர் ஆடி வந்தனர். இதில் பாமக மற்றும் விசிக கொடியுடன் ஆடியவர்களிடையே மோதல் ஏற்பட்டு கல்விச்சில் ஈடுபட்டனர். இதில், பாமகவைச் சேர்ந்த 5 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் வி.புத்தூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் நவீன்ராஜ்(15) மற்றும் அவரது நண்பன் கோபி ஆகிய இருவரும் கறவை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர்களை நெற்குணம் கிராமப் பகுதியில் தேடிய போது, அங்கு இருவரும் நெற்பயிர் பன்றிகளுக்கு வைக்கும் மின்வேலியில் சிக்கி மயக்க நிலையில் இருந்துள்ளனர். அதில் நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் பிப்ரவரி 26 அன்று அறிஞர் அண்ணா கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பூமியின் மேற்பரப்பில் சங்க கால சுடுமண் உறை கிணறு 2 இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த உறை கிணறுகள் அடுக்கு வகையைச் சேர்ந்தவை, தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன என தெரிவித்தனர்.
திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கின்ற மருவூர் ராஜா. இவர் மீது சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் எஸ்பி சரவணன் பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் ஷேக் அப்துர் ரஹ்மான் உத்தரவின் படி நேற்று போலீசார் மருவூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.