India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை (செப்.7) மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
▶️ மருத்துவ பணியாளர்:
வயது: 19 – 30(இருபாலர்)
கல்வித்தகுதி: பி.எஸ்.சி. நர்சிங், லைஃப் சயின்ஸ்
மாத சம்பளம்: ரூ.21,320
▶️ ஓட்டுநர்:
வயது: 24 -34(ஆண்கள்)
கல்வித்தகுதி: 10-வது தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம்: இலகு ரகம், பேட்ச்
மாத சம்பளம்: ரூ.21,120
SHARE பண்ணுங்க

விழுப்புரம் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <

செஞ்சி அடுத்த தாண்டவசமுத்திரம் துணை மின் நிலையத்தின் சார்பில் பராமரிப்பு காரணமாக இன்று 06/09/2025 சனிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தடை காரணமாக தாண்டவசமுத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஒதியத்தூர், சின்ன பொன்னாம்பூண்டி,தின்னலூர், சென்னாலூர், நாகம் பூண்டி ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம், இன்று (செப்.6) நடைபெற உள்ளது. மரக்காணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, மருத்துவக் குழுக்களிடம் பரிசோதனை செய்துகொண்டு, முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை NIRF வெளியிட்டுள்ளது. இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, 154-வது இடத்தைப் பிடித்துத் தமிழகத்திற்கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேலும், வேலூர் மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இக்கல்லூரி முதலிடம் வகிக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
▶️ இந்தியன் ஆயில்: 18002333555
▶️ பாரத் பெட்ரோல்: 1800224344
▶️ HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அதன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனத் தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், இதனைத் தடுக்க இயற்கை பூச்சி விரட்டிகள் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் ஜெயந்திரா சரஸ்வதி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி குனவதி, கைப்பந்து போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கி, தேசிய அளவிலும் பங்கேற்றுள்ளார். இவரது திறமையை பாராட்டி பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பரிசளித்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்:
▶️ வழுதாவூர், திருமுருகன்
▶️ ரெட்டணை. பாலசுந்தரம்
▶️ மேல் ஒலக்கூர், இளங்கோவன்
▶️ வளவனுார்,முருகன்
▶️ கப்பை, அருமைசெல்வம்
▶️ செ.பூதுார், விஜயலதா
▶️ மேல்நெமிலி, லட்சுமி நாராயணசாமி
▶️ பக்கிரிதக்கா, ராஜலட்சுமி
▶️ ரெட்டணை, மாசிலாமணி
▶️ ராஜாம்புலியூர், நமச்சிவாயம்
மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.