Villupuram

News November 13, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விழுப்புரம் 38 மில்லி மீட்டர், கோலியனூர் 40 மில்லி மீட்டர், வளவனூர் 45 மில்லி மீட்டர், நேமூர் 17 மில்லி மீட்டர், வானூர் 20 மில்லி மீட்டர், திண்டிவனம் 4 மில்லி மீட்டர், மரக்காணம் 38 மில்லி மீட்டர், செஞ்சி 2 மில்லி மீட்டர், அனந்தபுரம் 11 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 19 மில்லி மீட்டர், அரசூர் 15 மில்லி மீட்டர். சராசரி மழை அளவு 12.90 மில்லி மீட்டர்.

News November 13, 2024

விழுப்புரம் அருகே ஒன்பது கடைகளுக்கு சீல்

image

விழுப்புரம் மாவட்ட போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையில் விழுப்புரம், ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின்படி, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் நடவடிக்கை எடுத்தனர்.

News November 13, 2024

விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

image

தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி வரும் 21 – 23ஆம் தேதி வரை மாவட்ட தொழில் மையத்தில் நடக்கிறது. இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையதள முகவரி மற்றும் மொபைல் 9080130299, 9080609808 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 13, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. சக்கரபாணி மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அதிமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறினர். இதையடுத்து வழக்கு வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News November 13, 2024

15ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நவம்பர் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். 

News November 13, 2024

திமுக மாவட்ட பொறுப்பாளர் அறிக்கை

image

விழுப்புரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதமசிகாமணி, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில், பாக முகவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், ஜன.1ஆம் தேதி அன்று 18 வயதுடையவர்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்தல், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குதல், தகுதியான வாக்காளரை சேர்த்தல் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 13, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.13) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அரியலூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மக்களே உங்க ஏரியாவில் மழையா?

News November 12, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்களது புகார்களை அல்லது அவசர உதவிக்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

News November 12, 2024

சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

விழுப்புரம் அருகே பணம்குப்பம் காலனி பகுதிக்கு இடுகாடு கேட்டு இறந்தவரின் உடலை விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைத்து மறியல் போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்பு வருவாய் துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

News November 12, 2024

விழுப்புரத்தில் 9 கடைகளுக்கு சீல்

image

விழுப்புரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுகந்தன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து வேறு கடைகளில் விற்கப்படுகிறதா எனவும் கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!