Villupuram

News September 9, 2025

விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News September 9, 2025

விழுப்புரம்: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே இங்கே <>கிளிக் செய்து<<>> 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 9, 2025

விழுப்புரம்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

விழுப்புரம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 9, 2025

விழுப்புரம் பெயர் காரணம் தெரியுமா?

image

விழுப்புரம் மாவட்டத்தின் பெயர்க் காரணம் குறித்த இரண்டு முக்கியக் காரணங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று, வில் மற்றும் அம்பு வீரர்கள் வசித்த பகுதி என்பதால் “வில் அம்பு புரம்” என அழைக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் என மருவியது. மற்றொன்று, விஜயநகர மன்னர்கள் இப்பகுதியை ஆண்டபோது “விஜயபுரம்” எனப் பெயரிடப்பட்டு, அது நாளடைவில் விழுப்புரம் என மாறியதாக கூறப்படுகிறது.

News September 9, 2025

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எடப்பாடி பழனிசாமி

image

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பேருந்துகளை ஓசி பேருந்து என கொச்சைப்படுத்தி பேசியவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இவர்களெல்லாம் சமூகநீதியை பாதுகாப்பார்களா? ஏழைகள் என்றால் ஏளனமாக பார்க்கும் கட்சி திராவிட முன்னேற்ற கழகம். என மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தில்
திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

News September 9, 2025

ட்ரோன் தொழிற்சாலைக்கு ஒப்புதல் கேட்ட விழுப்புரம் எம்.பி.

image

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தொழிற்சாலை அமைத்திட விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி மத்திய
பாதுகாப்புத் துறை நிலைக்குழுவின் தலைவர் ராதா மோகனிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேற்று கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். அப்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் உடனிருந்தார்.

News September 9, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம் ஒன்றியம் நெகனூர், மரக்காணம் ஒன்றியம் கொளத்தூர், வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம், ஒலக்கூர் ஒன்றியம் ஓங்கூர் மற்றும் கண்டமங்கலம் ஒன்றியம் பாக்கம் பகுதிகளில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மருத்துவ காப்பீட்டு, ஆதார், இ சேவை உள்ளிட்ட வசதிகளை பொதுமக்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

விழுப்புரம்: நீரில் மூழ்கி பலி

image

கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியாா் சாவடி சோ்ந்தவா் மணிபால் (65),மீனவா் நேற்று அதிகாலை தனது படகில் கடலுக்குள் சென்று சின்ன முதலியாா் சாவடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கடல் அலை சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணிபாலுக்கு காயம் ஏற்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்தாா். புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 9, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

விழுப்புரத்தில் பதவி உயர்வு தரும் அரசலீஸ்வரர் கோயில்

image

விழுப்புரம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில் உள்ளது அரசலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இங்குள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ப்ரோமோஷனுகாக காத்திருக்கும் உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!