India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் அடுத்த ஆத்தூர் கூட்ரோடு அருகே ராஜேந்திரன் என்ற நபர் வழக்கம் போல் இன்று அதிகாலை நடைபயணம் சென்றுள்ளார். இந்நிலையில், அவ்வழியாக வந்த லாரி ராஜேந்திரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் அவர் தூக்கக்கலகத்தில் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.
*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுனசோங்கம் ஐடக் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி முன்னிலையில் இன்று (28.11.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் இருந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி கோட்டகுப்பம், திண்டிவனம், உட்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று (28.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.28) மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக மாறும் எனவும், அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வரும் நவ.30ஆம் தேதி கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (27.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்தி பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் பா.ரஞ்சித் இருவரையும் கண்டித்து இன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் வேலு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தனபால், ஒன்றிய பொதுச்செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.