Villupuram

News November 21, 2024

தேசிய சிலம்பம் போட்டி: விழுப்புரம் மாணவர்கள் பதக்கம்

image

பெங்களூரில் உள்ள அத்திபள்ளியில், கடந்த 17ஆம் தேதி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் எம்.எஸ். சிலம்பாட்ட கழகத்தின் மாணவர்கள் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், ஒற்றை கம்பு சிலம்பாட்ட பிரிவில் 35 மாணவர்கள் பங்கு பெற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களையும் பிடித்து, பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை வென்றனர்.

News November 21, 2024

கஞ்சா விற்பனை செய்த கணவன் – மனைவி கைது

image

திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புதுவை மாநிலம் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பவானி – பிரகாஷ் தம்பதியினரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். 1.300 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இவர்களை சிறையில் அடைத்தனர்.

News November 21, 2024

கீழையூர் சிவன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

image

அரகண்டநல்லூர் அருகே உள்ள கீழையூர் அருள்மிகு சிவானந்தவல்லி உடனுறை ஸ்ரீ வீரடேஸ்வரர் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மற்றும் ஆய்வாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உண்டியலில் உள்ள பொருட்களை எண்ணினார்கள்.

News November 21, 2024

விழுப்புரத்தில் 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

image

விழுப்புரத்தில் நேற்று ஒரே நாளில் நாளில் 300 நெகிழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நகராட்சி சார்பில், வணிகர்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

News November 21, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 20, 2024

விழுப்புரம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேர் கைது

image

திண்டிவனம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பிரகாஷ் தமிழரசன், ஜெமினி, மூன்று நரிக்குற இளைஞர்களை கைது செய்து அவரிடம் இருந்த மூன்று நாட்டு துப்பாக்கி, 28 நாட்டு வெடிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், எட்டு கத்திகள், இரண்டு கிலோ ஒயர்கள், வனவிலங்குகளுக்கு தரப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

News November 20, 2024

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் பலி

image

விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராகுல், மணிகண்டன், விஷ்வா மூவரும், நேற்று ஒரே பைக்கில் அழுக்கு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2024

விழுப்புரம் வழியாக சபரிமலைக்கு ரயில் சேவை

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம் வழியாக சபரிமலை செல்வதற்காக கொல்லம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16101) ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது, தினசரி இரவு 7.20 மணிக்கு விழுப்புரத்திற்கு வருகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு புனலூர் வழியாக கொல்லம் செல்கிறது. புனலூரில் இருந்து சபரிமலை செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News November 20, 2024

விழுப்புரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரத்தில் இன்று (நவ.20) முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கிளப்பாக்கம், கீழ்சிவிரி, ஆவணிபூர், அச்சிப்பாக்கம், கருவைப்பாக்கம், ஆண்டப்பட்டு. மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் (9AM – 2PM) மின்தடை ஏற்படும். SHARE

error: Content is protected !!