India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகரில் இன்று(ஏப்.14) பிற்பகல் தவெக கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். தேசத் தியாகி அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு இளைஞரணி பொருளாளர் ஹரி தலைமை தாங்கினார். பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் புகையிலை கடத்துவோரை கண்காணிக்க அமைக்கப்பட்ட தனி படைகளை எஸ்.பி. டீம் ரகசியமாக கண்காணித்து வருகின்றது. கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்கள் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளிலும் சுலபமாக வந்து சேர்கிறது. தற்போது விழுப்புரத்தில் எல்லா காவல் நிலையங்களிலும் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா புழக்கம் குறையும் என கூறுகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மயிலம் முருகன் கோவில் திருவிழாவுக்கு தன் உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார். சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மயிலம் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் கிராமத்தில் உள்ள முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று(ஏப்.13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் வழிகாட்டி 2025 நிகழ்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என குழப்பத்தில் இருப்பார்கள். இதற்கு தீர்வுகாணும் பொருட்டு இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விஜய் இன்போ மீடியா இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று .விழுப்புரம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில் உள்ளது அரசலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இங்குள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகம் செய்தால் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ப்ரோமோஷனுகாக காத்திருக்கும் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.