India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் மணி (30), குமார் (35), கார்த்தி (35). விவசாய கூலி தொழிலாளர்களான மூவரும், நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வேட்டவலத்தில் இருந்து கண்டாச்சிபுரம் நோக்கிச் சென்றனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் மணி, குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவெகவின் செஞ்சி தொகுதி பொறுப்பாளர் குணா சரவணன் தலைமையிலான ஒன்றிய நிர்வாகிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக மனு கொடுத்துள்ள புதிய வாக்காளர்களை வீடுத் தேடி சந்தித்துள்ளனர். நேற்று, புதிய வாக்காளர்களுக்கு மாலை அணிவித்து, பழம், இனிப்புகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய உறுப்பினர்களின் கவனத்தை தவெகவினர் ஈர்த்து வருவதோடு, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 91 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 59 வழக்குகளும், கடந்த 2023ஆம் ஆண்டு 44 வழக்குகளும் என படிப்படியாக போக்சோ வழக்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு செப் மாதம் வரை 117 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், முன்னைக் காட்டிலும் தற்போது புகார் கொடுக்க முன் வருகிறார்கள் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முகையூர் மேற்கு ஒன்றிய அதிமுக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உளுந்தூர்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவை இன்று (நவம்பர் 18) சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வரும் நவம்பர் 19 மற்றும் 26 ஆகிய தினங்களில் வண்டி எண் 22652 பாலக்காடு இருந்து, MGR சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் மாற்று பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்லும். மேலும் கரூர் மோகனுர் நாமக்கல் ராசிபுரம் சேலம் ஜோலார்பேட்டை அரக்கோணம் வழியாக செல்லாது.
மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் 49 காலியிடங்களுக்கு நேரடியாக நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் நேர்காணல் வரும் 25ஆம் தேதி முதல் டிச.04ஆம் தேதி வரை மத்திய கூட்டுறவு வங்கியில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை www.drbvpm.in/hallticket.php இணையத்தில் பதிவிறக்கி நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் 4 மையங்களில் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் 113 அரசுப்பள்ளிகளிலிருந்து 770 பேர், 5 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளைச் சேர்ந்த 43 பேர், 3 நகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 11 பேர், 16 அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 40 பேர் என மொத்தமாக 874 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 49 விற்பனையாளர் பணியிடங்களுக்கு தேர்வு வருகிற 25-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள 04146-229854 எண்ணிற்கு அழைக்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி திமுக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது. வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் இன்று (18.11.2024) மாலை 03.00 மணி அளவில் ஜானகிபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மணிமண்டபம் மற்றும் 21 சமூகநீதி போராளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபங்களின் கட்டுமான பணிகளை பார்வையிடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.