India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடக்கிறது. இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், நாளை (07.11.2024) வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கப்பெறும். இப்பயிற்சியானது வேலூரில் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 8072828762, 9025808570 எண்ணிற்கு அழைக்கலாம்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவ.6) நடத்திய சோதனையில் 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 5 பேர் மீது மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மேல்பாடி ஊராட்சியில் சின்னகீச குப்பம் பகுதியில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் துரைமுருகன் நாளை மாலை திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (நவ. 6) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஜ்ஜித், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை தாக்கிய விவகாரத்தில் ஏற்கனவே டி ஐ ஜி, சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி இன்று (நவம்பர் 6) உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க வகையில் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மூலப்பொருளான வெல்லம் கிடைப்பதை தடுக்கும் வகையில் வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் வெல்லத்தை விற்கும் போது கவனமாக விற்பனை செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வரும் நவம்பர் 8-ம் தேதி காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க.
அன்வர்திகான்பேட்டை அருகே நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பத்மராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.