Vellore

News January 31, 2025

சட்ட விரோத மது விற்பனை; 3 பேர் கைது

image

வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மது பாட்டில்களை விற்பனை செய்த கோபால் (32), மோகன் (60), ராஜேஷ் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். <>உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் <<>>தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News January 31, 2025

நெல் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி

image

வேலூர் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.517 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 31, 2025

வேலூர் மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம்

image

வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அவசர செயற்குழு கூட்டம் இன்று தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News January 30, 2025

கூட்டு பாலியல் வழக்கில் 4 பேருக்கு 20ஆண்டு சிறை

image

கடந்த 2022இல் வேலூரில் ஆண் நண்பரோடு பயணித்த மருத்துவர் கடத்தி கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைதான பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News January 30, 2025

டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி

image

வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 3.2.2025 அன்று டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அரசு இயந்திர கலப்பை பணிமனை தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் நடைபெற உள்ளது. எனவே இந்த அறிய வாய்ப்பை மாவட்ட விவாசியிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளபடுகிறது.

News January 30, 2025

வேலூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

image

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வேலூரில் உள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தரமாக உள்ளதா?, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் தரம் குறித்து ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடரும் என தெரிவித்தனர்.

News January 30, 2025

தொரப்பாடி மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

image

வேலூர் தொரப்பாடி மத்திய ஆண்கள் சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறை காவலர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலியை சேர்ந்த பாண்டி (34) செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் பாகாயம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பாண்டி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2025

குடியாத்தம் குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

image

குடியாத்தம் தட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் தரணி இவரது 2 வயது மகள் ஜெயப்பிரியா நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். இதுகுறித்து தரணி போலீசில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, சாந்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து எஸ்.பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

News January 30, 2025

வேலூர் திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (ஜன 30 ) நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் ஏபி நந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் முகமது சாஹிப் தலைமையில் மாலை 5 மணி அளவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியம் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!