Vellore

News February 2, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி வருகிற பிப்ரவரி 3-ம்தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம். இந்த மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி வரி 1.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News February 1, 2025

மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்

image

வேலூர் மாவட்டத்தில் மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மகாலிங்கம்,ரமேஷ் குமார் மற்றும் அரசு உயர்நிலை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News February 1, 2025

வேலூரில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி பலி

image

வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலா (65) இவர் கடந்த 27ஆம் தேதி தண்ணீர் என நினைத்து சமையலறையில் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்துள்ளார். இதையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜன.30ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2025

வேலூர் மாவட்டத்தில் 7 சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பள்ளிக்கொண்டாவில் பணியாற்றி வரும் சின்னப்பன் பொன்னைக்கும், பொன்னையில் பணியாற்றி வரும் முரளிதரன் பள்ளிக்கொண்டாவுக்கும், சத்துவாச்சாரியில் பணியாற்றி வரும் குமரன் மேல்பாடிக்கும் இதேபோல் மாவட்டம் முழுவதும் 7 சப்- இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி மதிவாணன் நேற்று உத்தரவிட்டார். ஷேர் செய்யுங்கள்.

News February 1, 2025

2025-2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலூர் எம்.பி

image

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நேற்று (ஜன.31), 2025-2026 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் (வெள்ளிக்கிழமை) முதல்நாளில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் எம்.பி கலந்து கொண்டார். உடன் சக மக்களவை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News February 1, 2025

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த கலெக்டர்

image

வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று (ஜன.31) நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 1, 2025

வேலூர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய கலெக்டர்

image

வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காட்பாடி சன்பீம் மெட்ரிக்பள்ளியில் நேற்று (ஜனவரி 31) நடந்த நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, காட்பாடி டிஎஸ்பி பழனி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 31, 2025

வேலூர் மேற்கு மாவட்டம் த.வெ.க கழக செயலாளர் நியமினம்

image

வேலூர் மேற்கு மாவட்டம் வேலூர் தொகுதி, அணைக்கட்டு தொகுதி. குடியாத்தம் (தனி) தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் மாவட்டக் கழகச் செயலாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்டக் கழக இணைச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரசாந்த், துணைச் செயலாளர் தமிழ்செல்வன், துணைச் செயலாளர் அருணா மேலும் செயற்குழு உறுப்பினர்கள் என 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

News January 31, 2025

காணாமல் போன சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு 

image

தட்டப்பாறை கிராமம் ஏரியின்கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி என்பவரின் 3வயது மகள் ஜெயப்பிரியா நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், காணாமல் போன குழந்தையை, டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று சிறுமி, வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். 

error: Content is protected !!