Vellore

News November 12, 2024

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

அணைக்கட்டு தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

image

தமிழகத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி
அணைக்கட்டு தாலுகாவில் நவம்பர் 20, 21 ஆம் தேதி நடக்க உள்ளது.அணைக்கட்டு தாலுகாவில் அரசு பணிகள், அரசு அலுவலகம்,ஆரம்ப சுகாதார நிலையம்,பள்ளிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அன்று மாலை அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

சாகும் வரை உழைப்பேன் : அமைச்சர் துரைமுருகன்

image

என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் பேசிய அவர், காட்பாடி தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.

News November 11, 2024

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 11) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 519 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 10, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர் 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 10, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 10, 2024

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய ஆட்சியர்

image

நேற்று கத்தேரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காலாண்டு தேர்வில் 10,12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார். ஆய்வின்போது கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் வட்டாட்சியர் சந்தோஷ் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயா முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News November 10, 2024

வேலூர் பொதுமக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மேட்டூர் தலைமை நீர் ஏற்றும் நிலையம் மற்றும் பொம்மிடி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க இயலாது. உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவம்பர் 10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

கற்பகம் சிறப்பு அங்காடியில் ரூ. 87 லட்சத்திற்கு விற்பனை

image

தீபாவளி பண்டிகையொட்டி தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை அக் 28 ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் கற்பகம் சிறப்பு அங்காடியில் ₹85 லட்சத்திற்கு பட்டாசுகளும், ₹2 லட்சத்துக்கு சிறப்பு தொகுப்பும் என மொத்தம் ₹87 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 10, 2024

கோட்டை அகழியில் ரசாயனம் கலந்துள்ளது – ஆய்வில் தகவல்

image

வேலூர் கோட்டை அகழி நீர் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிறம் மாறியது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறையினர், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் கோட்டை அகழி தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளது. அமோனியம், நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் ஆகியவை அதிகளவு உள்ளது. இதுவே தண்ணீர் நிறம் மாறுவதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.