India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்த கைதி நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நாகேந்திரனின் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் மாவட்ட நீதிபதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ஸ்ரீ சக்தி அம்மாவின் ஆசிர்வாதத்துடன் ஏழையின் குடும்ப திருமணச் செலவுகளுக்கு நிதியுதவி அளித்து “கல்யாணி திட்டம்” மூலம் திருமணம் செலவுக்கு நலத்திட்ட உதவி சக்தி அம்மாவால் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வழங்கப்பட்டது.
வேலூரில் மயான கொள்ளை திருவிழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். அதன்படி விழாவில் தேரின் உயரம், அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில், மின் சாதானப்பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். உள்ளிட்டா பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (பிப்.19) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவளை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் செய்யவும்
வேலூரில், 2022ஆம் ஆண்டு பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 18 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கெனவே 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில், 5வது குற்றவாளியான சிறுவனுக்கு நேன்று (பிப்.18) 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர்களை தடுக்கும் விதமாக காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (பிப்ரவரி 18) நடத்திய சோதனையில் 102 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் புதுவசூர் தனியார் பள்ளியின் பின்புறம் கட்டிட மேஸ்திரி வேலன் (32) என்பவர் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைத்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மயான கொள்ளை திருவிழா தொடர்பாக அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (பிப்ரவரி 18) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் எஸ்பி மதிவாணன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 18.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதியில் ஆடுகள் தொடர்ந்து திருடு போவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். நேற்று கே.வி குப்பம் சந்தையில் ஆடுகளை விற்க முயன்ற அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான சபரி(36), நிஷா(33) ஆகியோரை வியாபாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் 100கும் மேற்பட்ட ஆடுகளை இப்படி திருடி விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.