Vellore

News April 8, 2024

வேலூர்: வீட்டில் இருந்து 7 லட்சம் பறிமுதல்

image

காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் நடராஜன் வீட்டில் தேர்தலுக்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்றிரவு (ஏப்ரல் 7) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் சந்தோஷ் தலைமையிலான பறக்கும் படையினர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

News April 8, 2024

வேலூர் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தீவிரம்

image

பாராளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தபால் வாக்குகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று பெறும் பணி இன்று (ஏப்ரல் 8) நடந்தது. வேலூர் தொரப்பாடி பகுதியில் தபால் வாக்குகளை முதியவர்கள் செலுத்தினர். இந்த பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா பார்வையிட்டார்.

News April 8, 2024

மோடி வேலூர் வருகை: போலீசார் தீவிர சோதனை

image

மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை மறுநாள் (ஏப்.10) நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News April 8, 2024

வேலூர் சிறையில் கைதி மயங்கி விழுந்து பலி

image

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (53). இவருக்கு பெண் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஏப்ரல் 7) சிறையில்  மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த சிறை காவலர்கள் வேலூர்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News April 8, 2024

வேலூர்: ரூ.56 லட்சத்தை திரும்ப ஒப்படைத்த அதிகாரிகள்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி மாலை முதல் நேற்று வரை பறக்கும்படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மொத்தம் ரூ. 71,87,150 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை காண்பித்து இதுவரை ரூ.56,24,530 ரொக்கப்பணம் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 7, 2024

வேலூர் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) அதிகபட்ச வெயிலாக இன்று 106.3°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News April 7, 2024

பறவைகளுக்கு தண்ணீர் தர விழிப்புணர்வு

image

வேலூரில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மலைகளில் வாழும் பிற உயிரினங்களும் வெயிலின் கொடுமைக்கு ஆளாகின்றன. இதனால் சிட்டு குருவிகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொட்டாம்பட்டியில் #SaveBirds என்ற வாசகத்தில் சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் தண்ணீர் வைத்து சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் இன்று (ஏப்ரல் 7) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

News April 7, 2024

வேலூரில் லட்சக்கணக்கில் பறிமுதல்

image

மக்களவை தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று (ஏப்ரல் 6) வரை தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட  71 லட்சத்து 87, 150 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

வேலூர்:அமமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு

image

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனின் ஆணைக்கிணங்க மாநில MGR மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான சேவல். நித்யானந்தம் தலைமையில் நேற்று மாலை நெல்லூர் பேட்டையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஏசி சண்முகத்தை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டது. அப்போது நகர, மாவட்ட சார்பு அணி, நகர சார்பு அணி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!