India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை வணிக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (செப்டம்பர் 21) தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20) வேலூரில் 99.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் பகல் நேரத்தில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் சாலை ஓரங்களில் விற்கப்படும் ஜுஸ், நீர் சத்து நிறைந்த பழங்களை வாங்கி சாப்பிட்டனர். உங்க ஏரியால வெயில் எப்படி இருந்தது?
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (செப்டம்பர் 20) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 20) இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வேலூரில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே முன் விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளி வளாகத்திற்குள் மாணவன் சக மாணவனை பிளேடால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது குறித்து இன்று (செப்டம்பர் 20) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்தி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி மேளா (PMNAM) வருகிற செப்டம்பர் 23-ம் தேதி வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஐ.டி.ஐ. எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் தோ்ச்சி, தோல்வியடைந்தவா்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
காட்பாடி காந்திநகர் சாலையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 24 கடைகளை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(செப்டம்பர் 20) திறந்து வைக்க உள்ளார். இதில் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர் தான். அது முதலமைச்சரின் அதிகாரம். அவர் முடிவு செய்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். தொண்டர்களில் ஆரம்பித்து அவை முன்னவர் துரைமுருகன் உட்பட அனைவரும் உளமாற வரவேற்போம் என அவர் பேசினார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அரசு பளுதூக்கும் மையத்தில் திருவண்ணாமலை மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த 68 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் 76 மாணவர்கள் கலந்து கொண்டனர் முதல் 4 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.