India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனை சக மாணவர் பிளேடால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் தலைமையிலான அதிகாரிகள் ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி அடித்து சித்திரவதை செய்வதாக வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமலை, பத்ரி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி 2 பேரை நேற்று ( செப் 21) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு ஆணையை பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேற்று (செப்டம்பர் 21) வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருதம்பட்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம். மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கிட்டத்தட்ட 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில் வேலூரில் இன்று (செப்டம்பர் 21) வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 92.1டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கான கல்வெட்டினை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3ஆவது புதன்கிழமை தாலுகா அளவில் கலெக்டர் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இந்த மாதம் (செப்.25) வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகாவில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூரில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள்-2024 பிஜி நாட்டின் தலைநகரமான சுவாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியா என்பவர் கலந்து கொண்டு சினாச் பிரிவில் 85 கிலோ, கிளின்ஜெர்க் பிரிவில் 105 கிலோ என்று மொத்தம் 190 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று சாதனை படைத்தார். அவரை மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.